தனுசுக்காக கதை பண்ணவில்லையாம் பிரபுசாலமன்!

Bookmark and Share

தனுசுக்காக கதை பண்ணவில்லையாம் பிரபுசாலமன்!

மைனா, கும்கி படங்களின் ஹிட் காரணமாக பிரபல இயக்குனர் பட்டியலில் தன்னை சேர்த்துக்கொண்டவர் பிரபுசாலமன். ஆனால், கயல் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறாததால் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பிரபுசாலமனுக்கு ஒரு சிறிய சறுக்கல் ஏற்பட்டது.

அதனால் அதை சரி செய்யும் பொருட்டே, அடுத்தபடியாக அவர் தனுஷை வைத்து படம் இயக்குவதாகவும், அதனால் தனது பாணியில் இருந்து விலகி தனுசுக்காகவே கதை பண்ணியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால். இதுபற்றி பிரபுசாலமன் தரப்பில் விசாரித்தபோது, தனுசுக்கென்று தனிப்பட்ட முறையில் கதை பண்ணவில்லை என்கிறார்கள். இதுவும் பிரபுசாலமனின் வழக்கமான பாணி படம்தான்.

அதோடு மைனா படத்திற்கு பிறகு இந்த படத்தைத்தான் அவர் இயக்குவதாக இருந்தார். ஆனால், பட்ஜெட் பெரிய அளவில் இருந்ததால் இந்த கதையை தள்ளி வைத்துவிட்டு அடுத்து கும்கியை இயக்கினார் பிரபுசாலமன்.

இந்த நிலையில், கயல் 11 கோடி வரை வியாபாரமாகி விட்டது. ஆனால் படத்தை வாங்கியவர்களுக்கு போட்ட பணம் கைசேர்ந்ததா? என்பது கேள்விக்குறியே. அதனால்தான் அடுத்த படத்தை மார்க்கெட்டில் இருக்கும் தனுஷை வைத்து இயக்கினால் படமும் ஹிட்டாகி விடும்.

கயலில் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களும் அந்த தொகையை தனுஷ் படத்தில் எடுத்துக்கொள்வர்கள் என்பதே தனுஷ் பக்கம் பிரபுசாலமன் சாய்ந்ததற்கு முக்கிய காரணமாம்.

தற்போது தனுஷ் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்த படத்துக்காகவும் வழக்கம்போல் புதுமுக நாயகி வேட்டையை தொடர்ந்து வரும் பிரபுசாலமன், ஜூன் மாதம் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம்.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions