தனுஷை தேடிப்போன பிரபுசாலமன்.?!

Bookmark and Share

தனுஷை தேடிப்போன பிரபுசாலமன்.?!

மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்து புதுமுக நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்தார் பிரபுசாலமன். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, படம் ஆரம்பித்தது முதல் கடைசிவரை என்னோடு ஹீரோக்கள் ட்ராவல் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் புதுமுகங்களை ஹீரோவாக்குகிறேன்.

பிரபல ஹீரோக்களால் என்னால் ட்ராவல் பண்ண முடியாது என்று ஒருமுறை விளக்கம் சொன்னார் பிரபுசாலமன். இப்படி சொன்ன பிரபு சாலமன் கயல் படத்தை அடுத்து இயக்க உள்ள படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார்.

இதற்கான கதை விவாதம் இப்போது நடைபெற்று வருகிறது.  தற்போது பாலாஜி மோகன் இயக்கும் மாரி படத்தில் நடித்து வரும் தனுஷ், அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூதாடி என்ற படத்திலும், ஒளிப்பதிவாளரும் வேலையில்லா பட்டதாரி வெற்றிப்படத்தின் இயக்குநருமான வேல்ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த இரண்டு படங்களிலும் தனுஷ் நடிப்பதாக சொன்னாலும் இப்படங்களின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. எப்போது துவங்கும் என்பது குறித்தும் எந்த அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

எனவே, மாரி படத்தை முடித்துவிட்டு பிரபு சாலமன் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம், தனுஷ் வரும்போது ஸ்கிரிப்ட் ரெடியாக இருந்தால்தான் பிரபுசாலமன் படத்தில் நடிப்பார் என்றும், இல்லை என்றால் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்துவிட்டுத்தான் பிரபுசாலமன் படத்துக்கு கால்ஷீட் கொடுப்பார் என்றும் தனுஷ் வட்டாரத்தில் தகவல் அடிபடுகிறது.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions