பிரபுக்கு ஜோடியாக நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன்: ஊர்வசி

Bookmark and Share

பிரபுக்கு ஜோடியாக நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன்: ஊர்வசி

அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரித்துள்ள புதிய படம் ‘உன்னோடு கா.’ இதில் ஆரி கதாநாயகனாகவும், மாயா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

பிரபு, ஊர்வசி, தென்னவன், ஸ்ரீரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இந்த படத்தை ஆர்.கே. டைரக்டு செய்துள்ளார். சத்யா இசையமைத்துள்ளார்.

படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா அபிராமி திரையரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் பிரபு பங்கேற்று பேசியதாவது:-

‘‘உன்னோடு கா படத்தில் நடித்தது ஜாலியான அனுபவமாக இருந்தது. நகைச்சுவை, காதல், குடும்ப விஷயங்கள் உள்பட அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய ஜனரஞ்சக படமாக வந்துள்ளது. இப்போது படம் எடுப்பது என்பது கஷ்டமான விஷயமாக இருக்கிறது.

இந்த கால கட்டத்திலும் ஒரு கதையை எழுதி சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படத்தை அபிராமி ராமநாதன் அருமையாக உருவாக்கி இருப்பது பாராட்டத்தக்கது.

இந்தியாவிலேயே சிறந்த நடிகை ஊர்வசி. அவருடன் சேர்ந்து நடித்தாலே நாம் நடிக்கும் காட்சிகள் மெருகேறிவிடும். நாங்கள் இருவரும் நடித்த காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன.

இந்த படத்தை தயாரித்துள்ள அபிராமி ராமநாதன் காரைக்குடி அருகே உள்ள பூலாங்குறிச்சி என்ற ஊரில் திருமண மண்டபம் கட்டி அந்த பகுதியில் உள்ளவர்கள் இலவசமாக அங்கு திருமணத்தை நடத்திக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.’’

இவ்வாறு பிரபு கூறினார்.

‘‘விழாவில் நடிகை ஊர்வசி பேசும்போது, ‘‘இந்த படத்தில் பிரபு ஜோடியாக நடித்துள்ளேன். அவருடன் நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன். 1984 முதல் பிரபு வீட்டு சாப்பாட்டை நான் சாப்பிடுகிறேன்.

என்னை எங்கு சந்தித்தாலும் நலம் விசாரிப்பார். குடும்பத்தினர், வேலைக்காரர்கள் நலன் பற்றியும் விசாரிப்பார். மனம் சஞ்சலமாக இருக்கும்போதெல்லாம் ஆறுதல் சொல்லி இருக்கிறார். இந்த படம் நகைச்சுவை கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

மேற்கண்டவாறு ஊர்வசி பேசினார்.

விழாவில் அபிராமி ராமநாதன் வரவேற்று பேசினார். தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.தாணு, செயலாளர் டி.சிவா, திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், நடிகர் கே.ராஜன் உள்பட பலர்கலந்துகொண்டனர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions