பிரபுதேவா படப்பிடிப்பில் அரங்கேறிய சோகம்

Bookmark and Share

பிரபுதேவா படப்பிடிப்பில் அரங்கேறிய சோகம்

பிரபுதேவா தேவி படத்துக்கு பிறகு மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கி விட்டார். இவர் சிவசக்தி புரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பில் லட்சுமி மேனனுடன் யங்மங்சங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறாது. இதில் பங்கேற்கும் துணை நடிகர்கள் கும்பகோணத்தில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். இன்று காலை திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து இருந்தனர்.

இதற்காக 10 வேன்களில் 100க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் வேனில் சென்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் எடுத்து சென்றனர்.

நேற்று பெரம்பலூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஜல்லி ஏற்றி வந்த லாரி வேன் மீது மோதியது. அதில் இருந்த சென்னையை சேர்ந்த துணை நடிகர் ஆறுமுகம், வேன் டிரைவர் கும்பகோணம் சாக்கோட்டையை சேர்ந்த விஜி ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள்.

துணை நடிகர்கள் செல்லப்பா, ராமமூர்த்தி, மோகன், பாப்பாத்தி அம்மாள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். லாரியை டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Post your comment





Related News
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா
நயன்தாரா படத்தில் வில்லனாக பிரபுதேவா? ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு
பிரபுதேவாவின் வெற்றிப் படத்தின் இரண்டாடம் பாகம் வருகிறதா?
எங் மங் சங்! குங்பு மாஸ்டரான பிரபுதேவா
விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ
பிரபு தேவாவின் தம்பி நடத்தும் மாபெரும் போட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions