பிரபு தேவாவின் தம்பி நடத்தும் மாபெரும் போட்டி

Bookmark and Share

பிரபு தேவாவின் தம்பி நடத்தும் மாபெரும் போட்டி

தமிழ் திரையுலகில் நடன புயல் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா. இவரின் குடும்பமே ஒரு நடன குடும்பம், இவரது குடும்பத்தை சேர்ந்த நாகேந்திர பிரசாத் விரைவில் ஒரு பிரம்மாண்ட நடனப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளார். இவரும் இவரது அண்ணன்கள் பிரபுதேவா, ராஜு சுந்தரம் வழியில் சில படங்களில் நடித்தவர். ரிதம், 123, தொட்டாசிணுங்கி, முத்தம் ஆகிய முக்கியமான படங்களில் நடித்தவர் நாகேத்திர பிரசாத்

இந்நிலையில் அவர் சென்னையில் எம்.எஸ்.எம். என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். இந்த நடன பள்ளியின் சார்பில் பிரம்மாண்ட நடன போட்டி ஒன்றை நடத்துகிறார். இசை கலைஞர் மைக்கேல் ஜாக்சன் பெயரில் எம்ஜேகப் என்ற பெயரில் இந்த போட்டிகள் நடக்கிறது. மும்பை, பெங்களூரு, கொச்சி, சென்னை ஆகிய நகரங்களில் இந்த போட்டிகள் நடக்கிறது. பிபாய், பீரீ ஸ்டைல் பிரிவில் நடக்கும் இந்த போட்டியில் இளம் நடன கலைஞர்கள் கலந்து கொண்டு ஆடுகிறார்கள். வருகிற 5ந் தேதி மும்பையில் போட்டிகள் தொடங்கிறது. ஒவ்வொரு நகரத்திலிருத்தும் ஒரு குழு தேர்ந்தெடுக்கப்படுகிறது. 10 தனி நடன கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதற்கான இறுதி போட்டிகள் வருகிற 20ந் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த போட்டியில் பிரபுதேவா நடுவராக பணியாற்றுகிறார். இப்போட்டியில் வெற்றிப் பெறும் குழுவிற்கு பரிசாக 11 லட்சம் வழங்கப்படுகிறது என்று நாகேத்திர பிரசாத் தெரிவித்தார்.


Post your comment





Related News
பிரபுதேவாவின் வெற்றிப் படத்தின் இரண்டாடம் பாகம் வருகிறதா?
எங் மங் சங்! குங்பு மாஸ்டரான பிரபுதேவா
விக்கி கோபமாக இருக்கும்போது மீண்டும் உலாவும் நயன், பிரபுதேவாவின் 'அந்த' போட்டோ
பிரபுதேவாவை சந்தித்தார் நயன்தாரா! மனம் விட்டுப் பேசியதென்ன?
சென்னையில் தேவி செய்த மகத்தான சாதனை!
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த பிரபுதேவா!
நல்ல வரவேற்பால் தேவி படத்துக்கு தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா-தமன்னாவால் தேவி சாத்தியமானது: ஏ.எல்.விஜய்
தேவி – பிரபுதேவாவின் கம்பேக் படம் எப்படி?
பிரபுதேவா - தமன்னா திடீர் நெருக்கம்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions