முதலில் பாடல்; பிறகு டிரைலர்: இந்தியில் புது ரூட்டை பிடிக்கும் பிரபுதேவா

Bookmark and Share

முதலில் பாடல்; பிறகு டிரைலர்: இந்தியில் புது ரூட்டை பிடிக்கும் பிரபுதேவா

பொதுவாக சினிமாவில் ஒரு விதியை கடைப்பிடிப்பார்கள். அதாவது, படம் முடிந்து அந்த படத்திற்கான விளம்பரப்படுத்துவதற்காக முதலில் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர், பின்னர் டிரைலர், அதன்பிறகு பாடல்களை வெளியிடுவர். இதைத்தான் ஒவ்வொரு படத்தயாரிப்பாளர்களும் சினிமாவில் காலங்காலமாக கடைப்பிடித்து வருகிறார்கள். 

ஆனால், பிரபுதேவாவோ தற்போது அக்ஷய்குமாரை வைத்து இந்தியில் இயக்கிவரும் புதிய படத்தில் புதிய ரூட்டை கொண்டுவர முடிவு செய்துள்ளார். 

அதாவது, இந்த படத்தில் இடம்பெறும் ‘துங் துங் பாஜே’ என்ற பாடலை முதலில் வெளியிடவிருக்கிறார்களாம். இந்த பாடலுக்கு பிறகு படத்தின் டிரைலரை வெளியிடவிருக்கிறார்களாம். இந்த பாடலை பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜ் பாடியுள்ளார். 

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி யார்டி கூறும்போது, அக்ஷய்குமார் படத்தின் பாடல்கள், டிரைலருக்கு முன்பு வெளியாவது இதுதான் முதல்முறை என்று தெரிவித்துள்ளார். இப்படத்தில் அக்ஷய்குமாருக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions