தெலுங்கு படம் இயக்கும் பிரபுதேவா!

Bookmark and Share

தெலுங்கு படம் இயக்கும் பிரபுதேவா!

தமிழில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல், வெடி ஆகிய படங்களை இயக்கியவர் பிரபுதேவா, தெலுங்கிலும் சில படங்களை இயக்கியுள்ள அவர், இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய வான்டட் படம் மெகா ஹிட்டானதால் முதல் படத்திலேயே பாலிவுட்டில் பேசப்படும் இயக்குனராகி விட்டார்.

அதனால் அதையடுத்து அவர் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்னணி ஹீரோக்களே போட்டி போடும் நிலை ஏற்பட்டது. அதனால், அதன்பிறகு தமிழ், தெலுங்கு சினிமாவை மறந்து விட்டு மும்பையிலேயே குடியேறியவர் ரவுடி ரத்தோர், ராமைய்யா வாஸ்தவைய்யா, ஆர்.ராஜ்குமார், ஆக்சன் ஜாக்சன் ஆகிய படங்களை இயக்கினார்.

இதில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஆக்சன் ஜாக்சன் படம் ப்ளாப் ஆனது. விளைவு, கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரபுதேவா உருவாக்கி வைத்திருந்த மார்க்கெட்டை காலியாக்கி விட்டது.

அதனால், அடுத்தபடியாக அவரை நம்பி கால்சீட் கொடுக்க முன்னணி பாலிவுட் நடிகர்கள் யாருமே முன்வரவில்லையாம். அதனால்தான், தற்போது தென்னிந்திய படங்களை இயக்குவதற்காக தெற்கு நோக்கி வந்திருக்கும் பிரபுதேவா, தமிழில் கமல், விஜய்யை வைத்து இயக்குவதாக செய்திகள் வெளியானபோதும், அவர் அடுத்தபடியாக தெலுங்கில் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஆந்திராவில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions