மீண்டும் நடிக்க வரும் பிரபுதேவா

Bookmark and Share

மீண்டும் நடிக்க வரும் பிரபுதேவா

தமிழில் ஒரு காலத்தில் வெற்றிகரமான நடிகராகவும், நடன இயக்குனராகவும் , சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனராகவும் வலம் வந்தவர் பிரபுதேவா. ஹிந்தியில் இயக்குனராக நுழைந்து தொடர்ந்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.

சமீப காலத்தில் இவர் இயக்கிய ஹிந்திப்படங்கள் மோசமான தோல்வியைத் தழுவின. இருந்தாலும் தற்போது அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க 'சிங் இஸ் பிளிங்' என்ற ஹிந்திப் படத்தை இயக்கி வருகிறார்.

தமிழில் பிரபுதேவா நாயகனாக நடித்த 'களவாடிய பொழுதுகள்' திரைப்படம் எப்போதோ முடிவடைந்துவிட்டு, இன்னும் வெளிவராமலேயே முடங்கிக் கிடக்கிறது. பிரபுதேவாவை மீண்டும் நடிக்க வைக்க சில இயக்குனர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

தெலுங்குத் திரையுலக இயக்குனரான விஜய் மடலா என்பவர் பிரபு தேவாவைச் சந்தித்து ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையைக் கேட்ட பிரபுதேவா மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லி நடிக்கவும் சம்மதம் சொல்லியிருக்கிறார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முற்றிலும் அமெரிக்காவில் சாலைப் பயணத்தில் நடக்கும் ஒரு த்ரில்லர் கதையைத்தான் இயக்குனர் சொன்னாராம். தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் இப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்கள். பிரபுதேவா ஓகே சொல்லிவிட்டால் ஜுன் மாதத்தில் படப்பிடிப்பை ஆரம்பிக்க முடிவெடுத்திருக்கிறார்களாம்.


Post your comment





Related News
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions