தயாரிப்பாளர் ஆகும் பிரபுதேவா

Bookmark and Share

தயாரிப்பாளர் ஆகும் பிரபுதேவா

திரைப்படங்களில் 'சோலோ' நடன நடிகராக திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த பிரபுதேவா அதன் பின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக விளங்கினார். தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகிலும் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.

தெலுங்கில் 'நூவொஸ்தாவன்டே நேனொன்தன்டானா' படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். அதன் பின் விஜய் நடித்த 'போக்கிரி' படத்தின் மூலம் தமிழிலும் இயக்குனராக அறிமுகமானார்.

ஹிந்தியில் 'வான்டட்' வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் அங்கும் மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறினார். தற்போது 'சிங் இஸ் பிளிங்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

விரைவில் பிரபுதேவா புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் ஒன்றை பிரபுதேவா ஆரம்பிக்க உள்ளாராம். இந்த நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

அவர் மட்டுமல்லாது மற்ற இயக்குனர்களுக்கும், இந்தப் பட நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க உள்ளாராம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.


Post your comment





Related News
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions