அம்மை நோயால் அவதி தனிமையில் தவிக்கும் பிரபுதேவா

Bookmark and Share

அம்மை நோயால் அவதி தனிமையில் தவிக்கும் பிரபுதேவா

நயன்தாராவுடன் பிரேக் அப் ஆனதிலிருந்து பாலிவுட் படங்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் பிரபு தேவா, அங்கேயே தங்கியும் இருக்கிறார். உடன் அவரது 2 மகன்கள் மட்டும் உள்ளனர்.

குடும்ப பிரச்னை காரணமாக உறவினர்கள் யாரும் அவருடன் தொடர்பில் இல்லாததால் தனிமையில் தவித்து வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான ‘ஆக்ஷன் ஜாக்சன்'  தோல்வி அடைந்தது. இதனால் வருத்தத்தில் இருந்தாலும் அடுத்து இயக்கவுள்ள ‘சிங் இஸ் பிளிங்‘ படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கிறார்.

இதற்கிடையில் கடந்த 2 வாரகாலமாக அவர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தங்கி இருக்கிறார். 2 மகன்களுக்கும் தொற்று ஏற்படலாம் என்ற பயம் காரணமாக அவர்களை வேறு இடத்தில் தங்க வைத்திருக்கிறார்.

உதவியாளர் ஒருவர் மட்டும் அவருக்கு உதவி வருகிறார். வீட்டில் ஓய்வு எடுத்து வரும் பிரபுதேவா டிவிடியில் படங்கள் பார்த்து நேரத்தை கழித்துக்கொண்டிருக்கிறார். பிரபுதேவாவுடன் அவரது தந்தை மட்டுமே தொடர்பில் இருக்கிறார்.

அவரும் மைசூரில் தங்கி இருக்கிறார். தனிமை சிறையில் இருப்பது போல் உணரும் பிரபுதேவா உடல்நிலை குணம் ஆனதும் மைசூர் சென்று தந்தையுடன் சில காலம் தங்கி இருக்க எண்ணி இருப்பதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Post your comment





Related News
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
காதலா..? இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..!
'U' சான்றிதழ் பெற்ற பிரபுதேவாவின் லக்‌ஷ்மி!
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி
லக்‌ஷ்மி தயாரிப்பாளரின் அழகான பரிசால் பிரமித்த நடனப்புயல் பிரபுதேவா!
விஜய்க்காக மீண்டும் களமிறங்கிய பிரபுதேவா
எம்.ஜி.ஆர். படத்தலைப்பை கைப்பற்றிய பிரபுதேவா
சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா
வேண்டாம் பிறந்த நாள் கொண்டாட்டம்! - தவிர்த்த பிரபு தேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions