எமிக்கு பார்ட்டி கொடுத்த பிரபுதேவா

Bookmark and Share

எமிக்கு பார்ட்டி கொடுத்த பிரபுதேவா

ஷங்கர் இயக்கத்தில் ‘ஐ’ படத்தில் நடித்த எமி ஜாக்சன் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக நடிப்பதுடன், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘கெத்து’ படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தியில் பிரபு தேவா இயக்கும் ‘சிங் ஈஸ் பிளிங்’ படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் கோவாவில் நடந்த இப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்றார். ஷூட்டிங் முடிந்தபிறகு எமியின் பிறந்தநாள் என்று அறிந்து பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்கான முழு ஏற்பாடையும் பிரபுதேவாதான் செய்தாராம்.படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தனர். அப்போது வயதான வெளிநாட்டு முதியவர் ஒருவர் வந்தார்.

அவரை கண்டதும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக்கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தார் எமி. யார் இவர், எமி எதற்காக முத்தம் தருகிறார் என்று அங்கிருந்தவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தபோது சஸ்பென்ஸ் வைக்காமல் இவர்தான் எனது தந்தை என அறிமுகப்படுத்தியதுடன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார் எமி.

தந்தைக்கு முத்தம் கொடுத்த போட்டோவை இணைய தளத்தில் ரசிகர்களுக்காக பகிர்ந்துகொண்ட எமி ‘இந்த பூமி கிரகத்தில் என்னை வியக்க வைக்கும் அற்புதமான மனிதர் என் தந்தைதான். அவர் இல்லாமல் நான் இல்லை’என மெசேஜ் வெளியிட்டார். 


Post your comment





Related News
இதெல்லாம் ஒரு ட்ரஸ்ஸா? பிரபல நடிகையின் கவர்ச்சியை கலாய்க்கும் ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
ரசிகர்களை கடும் அப்செட்டாக்கிய பிரபல முன்னணி நடிகையின் படு கவர்ச்சி புகைப்படங்கள்
இதை தடுத்து நிறுத்த வேண்டும், தயவு செய்து உதவுங்கள் - எமியை கலங்க வைத்த புகைப்படம்.!
இன்று எனக்கு ஸ்பெஷல் இரவு, எமி சொல்றத என்னனு பாருங்க - புகைப்படம் உள்ளே.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.!
தமிழ் சினிமாவுக்கு குட் பாய், பிரபல முன்னணி கவர்ச்சி நாயகி திடீர் முடிவு – சோகத்தில் ரசிகர்கள்.!
சீரியலிலும் கவர்ச்சி காட்ட வரும் பிரபல நடிகை - யார் அது?
PETA-விற்கு ஆதரவாக சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்ஸன்- போட்டோ உள்ளே
ஷங்கருக்கு ஏற்பட்ட பெரும் தலைவலி
குயின் ரீமேக்கில் எமி ஜாக்சன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions