விஜய் அவார்ட்ஸ் விழாவில், பிரபுதேவா-ஸ்ருதிஹாசன் நடனம்

Bookmark and Share

விஜய் அவார்ட்ஸ் விழாவில், பிரபுதேவா-ஸ்ருதிஹாசன் நடனம்

ஆண்டுதோறும் நடந்து வரும் மிகப்பெரிய திரைப்பட விருது வழங்கும் விழாவான விஜய் அவார்ட்ஸ் விழா நாளை (ஏப் 25) மாலை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பிரபுதேவா பல வருடங்களுக்கு பிறகு மேடையில் நடனம் ஆடுகிறார்.

அவர் "மை லைஃப் மை வே" (என் வாழ்க்கை என் வழி) என்ற தீம் பாடலுக்கு நடனம் அமைத்து ஆடுகிறார். அதனுடன் "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரெயிலே" பாடலுக்கும், "போக்கிரி பொங்கல்" பாடலுக்கும் நடனம் ஆடுகிறார்.

ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமலஹாசனின் புகழ்பெற்ற பாடல்களுக்கு நடனம் ஆடுகிறார். லட்சுமி மேனன் திகில், காதல் மற்றும் பேய் பாடல்களுக்கு ஆடுகிறார். இவர்கள் தவிர பிந்து மாதவி, ராய் லட்சுமி, இனியா, நந்திதா உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடனமாட இருக்கிறார்கள்.

பிரபுதேவா நடனங்கள் தவிர மற்ற நடனங்களுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். இந்த ஆண்டு சிறுபட்ஜெட் படங்கள்தான் அதிகமான விருதுகளை பெற இருப்பதாக ஜூரி வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions