பிரபுதேவாவுடன் காதலா?: புதுமுகம் தேஜஸ்வினி

Bookmark and Share

பிரபுதேவாவுடன் காதலா?: புதுமுகம் தேஜஸ்வினி

பிரபுதேவாவும், புதுமுக நடிகை தேஜஸ்வினியும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் கிளம்பின. நயன்தாராவுடன் காதல் முறிந்த பின் பிரபுதேவா பல நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டார். இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவுடன் சுற்றுவதாகவும் செய்திகள் பரவின. இதை இருவரும் மறுத்தார்கள்.

இந்த நிலையில்தான் தற்போது பிரபுதேவாவும் தேஜஸ்வினியும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருவரும் அடிக்கடி நட்சத்திர ஓட்டல்களில் தனிமையில் சந்தித்து பேசுவதாகவும் கூறப்பட்டது.

சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருவரும் சந்தித்து பேசியதை சக நடிகர்கள் சிலர் பார்த்து விட்டனர். அதன் பிறகே இவர்கள் காதல் விஷயம் அம்பலத்துக்கு வந்தன என்றனர். தேஜஸ்வினி தமிழில் மணல் நகர் படத்தில் நடித்து உள்ளார்.

பிரபுதேவாவுடனான காதல் கிசுகிசு பற்றி தேஜஸ்வினியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

பெங்களூரு ஓட்டலில் நடந்த விருந்தில் நிறைய நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். பிரபுதேவாவும் வந்து இருந்தார். நானும் கலந்து கொண்டேன். இதை வைத்து எனக்கும் பிரபுதேவாவுக்கும் காதல் என வதந்தி பரவி உள்ளது. இதை பார்த்து அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை. பிரபுதேவா எனக்கு நண்பராக கூட இல்லை. இந்த நிலையில் எங்களுக்குள் எப்படி காதல் மலர்ந்து இருக்க முடியும். இதில் உண்மை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions