எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் போராடுகிறேன்: பிரஜின் சொல்கிறார்

Bookmark and Share

எந்த பின்னணியும் இல்லாமல் சினிமாவில் போராடுகிறேன்: பிரஜின் சொல்கிறார்

சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து நடிகரானவர் பிரஜின். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். சரியான பின்னணி இல்லாததால்தான் என்னால் சினிமாவில் வேகமாக வளரமுடியவில்லை என்கிறார் பிரஜின்.

மேலும் அவர் கூறியதாவது:

எங்கள் குடும்பம் போலீஸ் குடும்பம். நான்தான் நடிகனாகியிருக்கிறேன். வேறு சினிமா பின்னணி எதுவும் எனக்கு இல்லை. நானே போராடித்தான் தீக்குளிக்கும் பச்சை மரம் படத்தில் அறிமுகமானேன்.

பல விருதுகளை பெற்ற படம் என்றாலும் மக்களை சென்று சேரவில்லை. நல்ல நடிகன் என்ற பெயர் எனக்கு கிடைத்தது. அதன் பிறகு நண்பர்களுக்காக சுற்றுலா என்ற படத்தில் நடித்தேன்.

கடைசியாக நடித்த மணல் நகரம் எனக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. அடுத்தும் அதே கம்பெனி தயாரிப்பில் ஒருதலை ராகம் சங்கர் சார் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறேன்.

நான் நடித்து நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் பழைய வண்ணாரப்பேட்டை வெளிவர இருக்கிறது. இதுதவிர மிரண்டவன் என்ற திகில் படத்தில் நடிக்கிறேன். பெரிய கனவுகளோ, ஆசைகளோ இல்லை. நல்ல நடிகன் என்று பெயர் பெற்றால் போதும் என்கிறார் பிரஜின்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions