மீண்டும் சேரும் பிரகாஷ்ராஜ்-பிரியதர்ஷன்?

Bookmark and Share

மீண்டும் சேரும் பிரகாஷ்ராஜ்-பிரியதர்ஷன்?

கடந்த 2008-ஆம் ஆண்டு இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘காஞ்சிவரம்’. இதில் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தேசிய விருது பெற்ற இப்படத்தை தொடர்ந்து, நெஞ்சை உலுக்கும் மற்றொரு திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ்-பிரியதர்ஷன் கூட்டணி மீண்டும் இணையவிருக்கிறது.

பிரியதர்ஷன் சமீபத்தில் பிரகாஷ்ராஜை சந்தித்து புதிய படத்தின் கதையை அவரிடம் கூறியதாகவும், பிரகாஷ்ராஜூக்கு அந்த கதை பிடித்துவிட்டதாகவும், உடனே அவர் இதில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் இயக்குனருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் ‘காஞ்சிவரம்’ படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்திலும் பணியாற்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இப்படம் குறித்த முழு தகவல்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. 


Post your comment





Related News
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
நான் தான் ரஜினிக்கு சரியான ஜோடி - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் சிம்ரன் பேச்சு
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
பேட்ட சூப்பர் ஸ்டாருக்கான படம் - இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் சுப்புராஜ் பேச்சு
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி
4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions