“டாக்குமெண்ட்ரியை தடைசெய்ய சொன்னவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்” - பிரகாஷ்ராஜ்..!

Bookmark and Share

“டாக்குமெண்ட்ரியை தடைசெய்ய சொன்னவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டும்” - பிரகாஷ்ராஜ்..!

கடந்த 2012ம் ஆண்டும் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தைப் பற்றி லெஸ்லீ உட்வின் என்பவர் இந்தியாவின் மகள் என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தார்.

ஆனால் இந்த ஆவணப்படத்தில் மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து, தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதியின் பேட்டியும் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை உண்டாக்கியது.

அதனால் இந்தப்படத்தை இந்தியாவில் ஒளிப்பரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது.  ஆனால், இந்தியா தவிர மற்ற நாடுகளில் இந்த ஆவணப்படத்தை பிபிசி ஒளிபரப்பியுள்ளது. இந்த ஆவணப்படத்தை நடிகர் பிரகாஷ்ராஜும் பார்த்துள்ளார்.

படம் பார்க்க பார்க்க அவரின் கண்கள் கண்ணீரால் குளமாகியது. “இந்தியாவில் மனிதர் என சொல்லிக்கொண்டு உலாவும் நாமெல்லாம் நிச்சயம் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும். அதிலும் இந்த டாக்குமெண்ட்ரியை தடை செய்யச்சொன்னவர்கள் தான் வெட்கப்படவேண்டும்” என டுவிட்டரில் பொங்கி எழுந்து கருத்து தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions