படக்குழுவை காத்திருக்க வைத்த பிரகாஷ்ராஜ்!

Bookmark and Share

படக்குழுவை காத்திருக்க வைத்த பிரகாஷ்ராஜ்!

தென்னிந்திய சினிமாவில் மெகா வில்லனாக ஏராளமான படங்களில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். ஆனால் சிங்கம் படத்திற்கு பிறகு அவருக்கான வில்லன் வாய்ப்புகள் குறையத் தொடங்கின.

அதனால் தோனி, கெளரவம், உன் சமையல் அறையில் போன்ற படங்களை தயாரித்து நடித்தார் பிரகாஷ்ராஜ். ஆனால் அந்த படங்களும் அவருக்கு கைகொடுக்கவில்லை.

பின்னர் தெலுங்கு சினிமாவில் சில படங்களில் வில்லனாக நடித்து வந்தபோது அங்குள்ள உதவி இயக்குனர்களை தவறான வார்த்தைகளால் திட்டியதால் இப்போது தெலுங்கு சினிமாவிலும் பிரகாஷ்ராஜின் மார்க்கெட் டல்லடித்து விட்டது.

அதனால் தனது தாய்மொழியான கன்னடத்துக்கு சென்று விட்டார். தற்போது கன்னடத்தில் மட்டும் அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ். இந்த நிலையில், தமிழில் யாக்கை என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார் அவர்.

ஆனால் இந்த படத்தில் அவருக்கு வில்லன் வேடம் கொடுக்கவில்லையாம். அவரது வில்லன் மார்க்கெட் இறங்கி விட்டதை சொல்லி ஒரு கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

ஆனால், அப்படி நடிப்பதற்கும் கேட்டபடி கால்சீட் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறாராம் பிரகாஷ்ராஜ். அதனால் அவருக்காக படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டு காத்திருக்கிறார்கள்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions