வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம்: பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

Bookmark and Share

வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம்: பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

காவிரி பிரச்சினையில் வன்முறைகளில் ஈடுபடுவதை கண்டித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-

“தமிழகத்திலும் கர்நாடகத்திலும் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். உரிமைக்காக போராடலாம். நீதிக்காக போராடலாம். அதற்காக பஸ்களை கொளுத்த கூடாது. சொத்துகளை அழிக்க கூடாது. வருங்கால தலைமுறைக்கு இதையா சொல்லித்தர போகிறீர்கள். கோபத்தை கலவரம் மூலம் வெளிப்படுத்துவது முறையல்ல.

எல்லோரும் நமது சகோதர சகோதரிகள். அனைவரும் மனிதாபிமானத்தோடு செயல்பட வேண்டும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண தலைவர்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் இருக்கிறது. நீதிமன்றங்கள் இருக்கிறது. அவர்களின் முடிவுக்கு விட்டு விடுவோம். எனக்கு கோபம் புரிகிறது.

அதை வெளிப்படுத்தும் முறை சரியல்ல. நமது சொத்துகளை நாமே அழிக்க கூடாது. வன்முறையில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். வன்முறைகளையும் வதந்திகள் பரப்புவதையும் நிறுத்துங்கள்.”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார். 


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions