இளவட்ட டைரக்டர்களின் புகழ்பாடும் பிரகாஷ்ராஜ்!

Bookmark and Share

இளவட்ட டைரக்டர்களின் புகழ்பாடும் பிரகாஷ்ராஜ்!

2013ல் உன் சமையல் அறையில் என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தார் பிரகாஷ்ராஜ். அதையடுத்து கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். பின்னர் எந்த தமிழ் படத்திலும் அவர் கமிட்டாகவில்லை.

தற்போது திரைக்கு வந்திருக்கும் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படம்கூட சில ஆண்டுகளுக்கு முன்பே அவர் நடித்து முடித்ததுதான். அதனால் தற்போது தெலுங்கு, இந்தியில் மட்டுமே அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதிலும் தெலுங்கில் நடித்தபோது உதவி இயக்குனர்களை அவர் தவறான வார்த்தைகளால் திட்டியதால் இப்போது தெலுங்கு சினிமாவிலும் பிரகாஷ்ராஜின் மார்க்கெட் டவுனாகி உள்ளது.

குறிப்பாக புதுமுக இயக்குனர்கள் அவரை ஓரங்கட்டுகிறார்கள். விளைவு, அடுத்தபடியாக கோலிவுட்டுக்கு வந்துவிட திட்டமிட்டுள்ள பிரகாஷ்ராஜ், சமீபத்தில் ஹிட் படங்களைக்கொடுத்த சில இளவட்ட டைரக்டர்களுக்கு போன்போட்டு, உங்களது படைப்பாற்றலைக்கண்டு நான் வியந்து விட்டேன்.

அதனால் உங்கள் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அளவுக்கதிகமாகி விட்டது என்று கூறி வருகிறாராம். ஒரு பெரிய வில்லன் நடிகரே தங்களை பாராட்டுவதால் உருகிப்போகும் டைரக்டர்கள், தங்கள் கதைக்கு அவர் அவசியமே இல்லை என்றபோதும், இப்போது பிரகாஷ்ராஜ்க்கு செட்டாகும்படியாக தங்கள் படங்களின் வில்லன் கேரக்டரை உருவாக்கி வருகிறார்கள்.


Post your comment





Related News
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions