பொமன் இரானி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்?

Bookmark and Share

பொமன் இரானி கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜ்?

தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடக்கூடிய ஆற்றல் நிறைந்தவர் பிரகாஷ் ராஜ். இவருடைய அலட்டல் இல்லாத நடிப்பு தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னட ரசிகர்களையும் வெகுவாக ரசிக்க வைக்கும்.

இந்நிலையில், பாலிவுட்டில் வெளிவந்த ‘ஜாலி எல்.எல்.பி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் போமன் இரானி நடித்திருந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்தியில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘ஜாலி எல்.எல்.பி’. இந்த படத்தில் அர்ஷத் வர்ஷி மற்றும் பொமன் இரானி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை தமிழில் உதயநிதி ரீமேக் செய்யப்போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன.

தற்போது இப்படத்தில் பொமன் இரானி நடித்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரகாஷ்ராஜிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை என்றும் கூறப்படுகிறது.

முதலில் இந்த படத்தை தயாரிக்க மட்டுமே முடிவு செய்த உதயநிதி, இந்த படத்தில் நடிக்கவும் முடிவு செய்துள்ளாராம். இவர்கள் நடிப்பது உறுதியாகிவிட்டால் இருவரும் இந்த படத்தில் வக்கீலாக நடிப்பார்கள். நீதித்துறையில் நடக்கும் நிகழ்வுகளை நகைச்சுவையாக சொல்லிய படம் ஜாலி எல்.எல்.பி என்பது குறிப்பிடத்தக்கது.

பிரகாஷ்ராஜ் ஏற்கெனவே இந்தியில் ‘முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.,’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.,’ படத்தில் பொமன் இரானி நடித்திருந்த டீன் கதாபாத்திரத்தில் கலக்கலாக நடித்திருந்தார். அதேபோல், இந்த படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்வார் என தமிழ் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
சீமராஜா படத்தில் எங்கள் முந்தைய படங்களில் இருந்து சற்று மேம்பட முயற்சித்திருக்கிறோம் - இயக்குனர் பொன்ராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions