அரசியல்வாதியான செல்லம் பிரகாஷ்ராஜ்!

Bookmark and Share

அரசியல்வாதியான செல்லம் பிரகாஷ்ராஜ்!

நேரம், ஜிகர்தண்டா படங்களில் அதிரடி வில்லனாக நடித்திருந்த பாபி சிம்ஹா, அதையடுத்து நடித்த ஆடாம ஜெயிச்சோமடா, ஆஹா ஆகிய படங்களில் காமெடி கலந்த வேடங்களிலும் நடித்தார். அதையடுத்து ஹீரோவாகி விட்ட பாபி சிம்ஹா, காதல் நாயகனாக உருவெடுத்துள்ளார்.

அதில் சில படம் ஆக்சன், சில படங்கள் காமெடி கலந்த கதைகளிலும் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அதில், கோ-2 என்ற படம் அரசியலை நைய்யாண்டி செய்யும் கதையில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

முழு அரசியல் சம்பந்தப்பட்ட கதை இது. என்றபோதும், அதை காமெடி கலந்து சுவராஸ்யமாக எடுத்து செல்கிறார்களாம். அந்த வகையில், இதற்கு முன்பு வில்லனாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக தன்னை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி வந்த பாபிசிம்ஹா, இந்த படத்தில் அரசியல்வாதியை எதிர்க்கும் வேடத்தில் நடித்திருக்கிறார்.

அப்படியென்றால் அரசியல்வாதியாக நடித்திருப்பது யார்? என்று கேட்டால், நம்ம செல்லம் பிரகாஷ்ராஜ்தான் நடித்திருக்கிறாராம். எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் பின்னி பெடலெடுக்கும் பிரகாஷ்ராஜ்க்கு ஏற்ற வேடம் என்பதால், சில காட்சிகளில் நிஜ கதர் வேட்டி சட்டைகளே மிரண்டு போகும் அரசியல் விளையாட்டுகளையெல்லாம் இந்த படத்தில் விளையாடியிருக்கிறாராம்.

ஆக, சில படங்களில் வில்லனாக நடித்திருக்கும் பாபி சிம்ஹாவும், நீண்டகாலமாக வில்லனாக கர்ஜித்துக்கொண்டிருக்கும் பிரகாஷ்ராஜூம் இந்த படத்தில் எதிரும்புதிருமான வேடங்களில் மிரட்டியிருக்கிறார்களாம்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions