பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்

Bookmark and Share

பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா? - பிரகாஷ்ராஜ் ஆவேசம்

‘மீ டூ’ இயக்கம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் முகநூலில் கூறியிருப்பதாவது:-

“சினிமா துறையில் உள்ள பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். ஆனால் புகார் சொன்னவர்களை எதிர்த்து கேள்வி எழுப்பும் நிலைமை உள்ளது. இதில் எல்லோரும் ஒன்றாக இருக்கிறார்கள். குற்றம் சொல்லும் நடிகைகளை வாயை மூட வைப்பதில் ஈடுபடுகின்றனர்.

யார் தூண்டுதலில் புகார் சொல்கிறாய்? அரசியல் பின்னணி உள்ளதா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். இது பாதிக்கப்பட்டவர்களை அடக்கும் முயற்சி ஆகும். அர்ஜூன் மீது சுருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியிருக்கிறார்.

ஆனால் அனைவரும் சுருதிக்கு எதிராக பேசுகிறார்கள். இந்த பிரச்சினையில் அர்ஜூன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நான் கூறினேன். இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்.”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சுருதி ஹரிகரன் மீது அர்ஜூன் சார்பில் ரூ.5 கோடி கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சுருதி ஹரிகரன் கூறும்போது, “ஒரு பெண் நியாயம் கேட்டு போராடினால், அவளை பலிகடா ஆக்குகின்றனர்” என்றார்.


Post your comment





Related News
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
ரஜினியின் பேட்ட - அஜித்தின் விஸ்வாசம் கூடுதல் வசூல் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
சிக்கலில் ரஜினியின் பேட்ட
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு 5 காட்சிகள் ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சையாக போட்டி - நடிகர் பிரகாஷ்ராஜ்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions