விஷால் அணிக்கு ரஜினி ஆதரவா..? பிரகாஷ் ராஜ் ஆவேசப்பேட்டி

Bookmark and Share

விஷால் அணிக்கு ரஜினி ஆதரவா..? பிரகாஷ் ராஜ் ஆவேசப்பேட்டி

2 தேசிய விருது பெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிப்படங்களிலும் கலக்கி வருகிறார். வரும் அக்டோபர் 18ம் தேதி நடக்கவிருக்கும் நடிகர் சங்க தேர்தல் பற்றி பிரகாஷ் ராஜ் மனம் திறந்துள்ளார்.

இதில் இவர் கூறுகையில் ‘என் ஆதரவு முழுவதும் விஷால் அணியினருக்கு தான், ஏனெனில் இளைஞர்கள் முன் வந்துள்ளனர். அவர்களுக்கு நாம் வழிவிட வேண்டும். அதே போல் அனுபவம் இல்லை என்று சொல்ல கூடாது, அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் தானே அனுபவம் பிறக்கும், இது ஒரு புரட்சிகான ஆரம்பம்’ என ஆவேசமாக கூறியுள்ளார்.

அடுத்த மாதம் 2ம் தேதி இந்தத்தேர்தல் சம்பந்தமாக விஷால் அணியினர் பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றனர். அந்தக்கூட்டம் ரஜினியின் ராகவேந்திரா மண்டபத்தில் நடக்கவிருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சிக்காக மண்டபத்தை இலவசமாக ரஜினி கொடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிடும் நேரத்தில் ஓரணிக்கு இலவசமாக மண்டபத்தைக் கொடுத்திருப்பதன் மூலம், தன்னுடைய ஆதரவு விஷால் அணியினருக்கு என்று சொல்லாமல் சொல்லுகிறாரா ரஜினி? என்ற பேச்சு எழுந்துள்ளது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions