காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்

Bookmark and Share

காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் ரஜினி படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்துள்ளது. காலா படத்தை ரிலீஸ் செய்வது குறித்து, கர்நாடக வர்த்தக சபையுடன், தேசிய திரைப்பட அமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், காலா விவகாரம் குறித்து பேசிய பிரகாஷ் ராஜ், பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் ஒரு திரைப்படத்தையோ அல்லது ஒரு கலையையோ சமூக பிரச்சனையை சுட்டிக்காட்டி எதிர்ப்பது சரியல்ல.

ஒரு பொதுவான பிரச்சனையை சுட்டிக் காட்டி சட்டத்தை கையில் எடுப்பது தவறு. இந்த விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க அரசு உறுதியளிக்க வேண்டும். படத்திற்கு எதிராக போராடினாலும், காலா படம் வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது.

படத்தை ரிலீஸ் செய்ய கர்நாடக வர்த்தக சபை தடை கோரவில்லை. விநியோகஸ்தர்களின் அழுத்தம் காரணமாகவே படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரகாஷ் ராஜ் கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
வாழ வைத்த சமூகத்துக்கு சேவை செய்யவே மக்கள் மன்றத்தில் பிரசாரம் - பிரகாஷ்ராஜ் பேட்டி
நெஞ்சம் நிமிர்த்திய நிஜ ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய ஜி.வி.பிரகாஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions