'தூங்காவனம்' படத்தில் பிரகாஷ் ராஜ், கிஷோர் வில்லன்களா?

Bookmark and Share

'தூங்காவனம்' படத்தில்  பிரகாஷ் ராஜ், கிஷோர் வில்லன்களா?

ஒரே நேரத்தில் 3 படங்களில் நடிக்க இருக்கிறார் என ரஜினியைப் பற்றி செய்திகள் வந்து கொண்டிருக்க, உண்மையில் ஒரே நேரத்தில் பல ப்ராஜக்ட்களில் பிஸியாக இருப்பது கமல்தான். உத்தம வில்லன் ரிலீஸாகி  ஓடிக் கொண்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து 'பாபநாசம்' படத்தை வெளியிடும் வேலையை முடுக்கி விட்டிருக்கிறார் கமல்.  அதோடு,  தனது அடுத்த படமான 'தூங்காவனம்' படத்தைத்தொடங்கிவிட்டார்.

கமலின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அவரின் அசோசியேட் ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.  ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா கதாநாயகி என்றாலும், மனீஷா கொய்ராலா, அனைகா சோதி, உமா ரியாஸ்கான் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

'தூங்காவனம்' படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடும் திட்டத்தில் தெலுங்கு வெர்ஷனுக்கு 'சீக்கட்டி ராஜ்யம்' எனப் பெயரிடப்பட்டு,  ஃபர்ஸ்ட் போஸ்டர் அறிமுக விழாவையும் ஆந்திராவிலேயே நடத்தினார்.

அந்த விழாவில் படத்தின் நாயகன் கமலுடன் நாயகி த்ரிஷாவும் கலந்து கொண்டதோடு, பிரகாஷ் ராஜும், கிஷோரும் கலந்து கொண்டார்கள். இவர்கள் கலந்து கெண்டதை வைத்து பிரகாஷ் ராஜும், கிஷோரும்தான் 'தூங்காவனம்' படத்தில்  வில்லன்களாக  நடிக்கிறார்கள் என்ற தகவல் அடிபடுகிறது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்
இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
காலா வெளியாவதை யாராலும் தடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions