பண மதிப்பு நீக்கத்துக்காக பிரதமர் மன்னிப்பு கேட்பாரா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

Bookmark and Share

பண மதிப்பு நீக்கத்துக்காக பிரதமர் மன்னிப்பு கேட்பாரா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

மத்திய அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ்ராஜ் சமீப காலமாக துணிச்சலாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

பத்திரிகையாளரும், அவரது தோழியுமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பத்திரிகையாளர் கொலைக்கு வருத்தம் தெரிவிக்காத பிரதமர் நரேந்திர மோடி என்னை விட சிறந்த நடிகர் என்றும், பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்? என்றும் பிரகாஷ்ராஜ் தெரிவித்து இருந்தார்.

இதை கண்டித்து அவருக்கு எதிராக கர்நாடகாவில் பா.ஜனதா போராட்டம் நடத்தியது.

இந்த நிலையில் பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி பிரகாஷ்ராஜ் டுவிட்டரில் கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-
பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது பணக்காரர்கள் தங்கள் கறுப்பு பணத்தை எப்படி மாற்ற வேண்டும் என்ற வழியை கண்டுபிடித்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டனர்.

இதில் சிக்கியது அப்பாவி மக்கள்தான். இந்த நடவடிக்கை நாட்டு மக்களை உதவியற்றவர்களாய் ஆக்கி சீர் குலைத்தது. ஏழை, மக்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

நமது காலத்தின் மிகப் பெரிய தவறுக்காக, அதை செய்தவர்கள் (பிரதமர் மோடி) மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா?

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் பிரதமரையோ அல்லது மத்திய அரசையோ நேரடியாக குறிப்பிடவில்லை. 


Post your comment





Related News
தெய்வமகள் பிரகாஷின் மனைவி இந்த பிரபல நடிகை தான் - வியக்க வைக்கும் புகைப்படம்.!
பேஸ்புக் ஓனரையே ஒரே வாரத்தில் ஓரம் கட்டிய பிரபல நடிகை.!
ஒட்டு தாடியால் பிரகாஷை கலாய்த்த நெட்டிசன்கள், வாணி போஜன் என்ன சொல்றாரு பாருங்க.!
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
ஐதராபாத்தை தொடர்ந்து மராட்டியத்திலும் பிரியா வாரியர் மீது புகார்
என்ன பிரகாஷு உனக்கே இது ஓவரா தெரியல, கலாய்க்கும் நெட்டிசன்கள் - போட்டோ உள்ளே.!
பிரியா வாரியர் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத சில விஷயங்கள்- நிறைய விஷயம் இருக்கு
ரசிகர்களால் வீட்டை விட்டு வெளியேறிய ப்ரியா வாரியர் - ஏன்? என்னாச்சு தெரியுமா?
ப்ரியா பிரகாஷ் வாரியரின் புருவ டான்ஸில் மயங்கிய முன்னணி நடிகர் - யாருனு பாருங்க.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions