தாஜ்மஹாலை இடிப்பதற்கு முன் கடைசியாக எனது குழந்தைகளுக்கு காட்டி விடுகிறேன்: பிரகாஷ்ராஜ் பரபரப்பு

Bookmark and Share

தாஜ்மஹாலை இடிப்பதற்கு முன் கடைசியாக எனது குழந்தைகளுக்கு காட்டி விடுகிறேன்: பிரகாஷ்ராஜ் பரபரப்பு

“தாஜ்மஹாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள், அதற்கு முன் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடைசியாக ஒரு முறை தாஜ்மகாலை காட்டி விடுகிறேன்” என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பரபரப்பு கருத்தை பதிவிட்டு உள்ளார்.

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் அடிப்படையில் கர்நாடகத்தை சேர்ந்தவர்.

பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மவுனமாக இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது “பிரதமர் மோடி தன்னை விட பெரிய நடிகர்” என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

உத்தரபிரதேச மாநில அரசு சுற்றுலா வழிகாட்டி புத்தகத்தில் இருந்து ஆக்ராவில் உள்ள உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலை நீக்கியது. அதைத்தொடர்ந்து அந்த மாநிலத்தை சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவர், தாஜ்மஹால் இந்தியா வரலாற்றில் களங்கம் என்று கடுமையாக குறை கூறினார்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீங்கள் தாஜ்மகாலை எப்போது இடிக்கப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். அதற்கு முன்பு நான் எனது குழந்தைகளை அழைத்துச் சென்று கடைசியாக ஒரு முறை தாஜ்மஹாலை காட்டி விடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் இருக்கும் பா.ஜனதா ஆட்சியை அவர் மறைமுகமாக குறை கூறியுள்ளார்.

பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு டுவிட்டரில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன. கன்னட திரைப்பட இயக்குனர் ரமேஷ் என்பவர், பிரகாஷ்ராஜ் எந்த மனைவி, குழந்தைகளை அழைத்துச் சென்று தாஜ்மஹாலை பார்க்கப்போகிறார்? என்று கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.


Post your comment





Related News
தேசிய விருது தளபதிக்கு தான்- கூறிய முன்னணி பிரபலம்
விஜய் மகன் சஞ்சய்க்கு மிகவும் பிடித்த படம் இது தானாம்
அஜித்திடம் கதை சொல்ல போவதில்லை- உண்மையை உடைத்த மோகன்ராஜா
சினிமாவுல இருக்குறவங்களையே மதிக்காத ரஜினி மக்களுக்கு என்ன செய்வார் - லொள்ளுசபா மனோகர் அதிரடி
யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி என்ன வேலை செய்கிறார் தெரியுமா?
நாச்சியார் படத்தில் நடித்தது பற்றி மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்.!
சூப்பர் ஸ்டாரின் ஒத்த வார்த்தைக்காக காத்திருக்கும் மூன்று மெகா ஹிட் இயக்குனர்கள்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
கமல்ஹாசனுக்கு ஆதரவு கொடுங்கள்- நடிகர் விவேக்
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions