தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்கவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்

Bookmark and Share

தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்கவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ் தனது அறக்கட்டளை மூலமாக ஏற்கனவே கர்நாடகா மாநிலத்தில் சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இபொழுது, பிரகாஷ்ராஜ் தெலுங்கானாவின் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி கே.டி. ராமாராவ்-ஐ நேரில் சந்தித்து மெஹபூப் நகர் மாவட்டத்தில் உள்ள கொண்டா ரெட்டி பள்ளி கிராமத்தை தத்தெடுக்க விரும்புவதாக தெரிவித்தார். 

மேலும், தெலுங்கானா மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள ‘மிஷன் காக்காட்டியா’- ஏரிகள் மற்றும் குளங்களை பாதுகாக்கும் திட்டமும், ‘ஹரித்தா ஹாரம்’- காடுகளை காக்கவும், இயற்கை வளத்தை மேம்படுத்த தொடங்கப்பட்ட திட்டமும் சிறப்பாக செயல்படுத்துவதற்காக பிரகாஷ்ராஜ் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரகாஷ் ராஜின் திட்டத்துக்கு அரசின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும் என அவருக்கு மந்திரி வாக்குறுதி அளித்துள்ளார். அதிகமான தெலுங்கு மொழிப்படங்களில் நடித்துள்ளதால் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பிரகாஷ் ராஜுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்
மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்
ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி
தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் …நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லன்..! அந்த நடிகை சொல்றாங்க..ஐயோ..!?
பெயர் மாற்றம் அவசியமில்லை : பிரகாஷ்ராஜ் அதிரடி
ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்
பிரகாஷ் ராஜ் , த்ரிஷாவிற்கு மேக்கப் செய்து நெகிழ வைத்த கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions