நடிகர் பிரகாஷ்ராஜ் …நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லன்..! அந்த நடிகை சொல்றாங்க..ஐயோ..!?

Bookmark and Share

நடிகர் பிரகாஷ்ராஜ் …நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லன்..! அந்த நடிகை சொல்றாங்க..ஐயோ..!?

நடிகர் பிரகாஷ்ராஜ்.. மனித நேயமிக்கவர். கஷ்டப்படும் யாராக இருந்தாலும் தேடித் போய் உதவும் குணம் கொண்டவர்.
தமிழ் திரையுலத்தில் இவரால் உதவி பெற்றவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். காவிரி நதி நீர் போராட்டத்தில் கன்னடர்களை “நீங்கள் மனிதர்களாக நடந்து கொள்ளுங்கள்” என்று  காட்டமாக பேட்டி அளித்தார்.

ஆனால், இவர் முதல்மனைவியும்  நடிகையுமான லலிதா குமாரியை திருமணம் செய்தார். காதல் திருமணம். லலிதா நடிகை டிஸ்கோ சாந்தியின் சொந்த தங்கை.
இருவருக்கும் கருது வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். பிரகாஷ்ராஜ் பாலிவுட் டான்ஸ் மாஸ்டரும், நடிகையுமான ஒருவரை திருமணம் செய்து  மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இவர் பற்றி லலிதாவின் அக்கா டிஸ்கோ சாந்தி அளித்த பேட்டி பகீர் என்கிறது..! படியுங்கள்.

திருமணமாகி 15 வருடங்கள் கழித்து என் தங்கையை அம்போவென விட்டுவிட்டார் பிரகாஷ் ராஜ். கஷ்டத்தில் தவிக்கும் அவளுக்கு நான்தான் பண உதவி செய்கிறேன் என்று லலிதகுமாரியின் அக்கா டிஸ்கோ சாந்தி கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.

நடிகர் பிரகாஷ்ராஜ், கவர்ச்சி நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதகுமாரியை காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், பிரகாஷ்ராஜுக்கும், லலிதகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்துக்கு கோர்ட்டில் மனு செய்து இருக்கிறார்கள்.

லலிதகுமாரி 2 குழந்தைகளுடன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார். பிரகாஷ்ராஜ், நீலாங்கரையில் வசிக்கிறார்.
தங்கையின் நிலை குறித்து நடிகை டிஸ்கோ சாந்தி கூறுகையில், என் தங்கை லலிதகுமாரியை பிரகாஷ்ராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டார். வடபழனி முருகன் கோவிலில்தான் திருமணம் நடந்தது.

ஆரம்பத்தில் ஒழுங்காக குடும்பம் நடத்தி வந்த பிரகாஷ்ராஜ், நாளடைவில் மாற ஆரம்பித்தார். நிறைய பெண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.
அவருக்கும், என் தங்கைக்கும் பிரச்சனை ஏற்பட்ட போது, இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று புத்திமதி சொன்னேன். பிரகாஷ்ராஜ் கேட்கவில்லை. இப்போது என் தங்கை தனியே வசிக்கிறாள். 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு ரொம்பவே கஷ்டப்படுகிறாள்.

அவளுக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை. குடி தண்ணீர் சப்ளை செய்வதைக் கூட நிறுத்தி விட்டார். கடந்த ஒன்றரை வருடங்களாக நான் மாதந்தோறும் ரூ.50,000 என் தங்கை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறேன்.
என் தங்கையின் மூத்த மகள் பூஜா, சமீபத்தில் பெரியவளானாள். அவளுக்கு நகைகள் செய்து போட்டு நான்தான் சடங்கு நிகழ்ச்சியைக்கூட நடத்தினேன்.
சொந்த மகளின் மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு கூட பிரகாஷ்ராஜ் வந்து வாழ்த்தவில்லை.

அவர் யார் யாருக்கோ செலவு செய்கிறார். ஆனால், தன் சொந்த குழந்தைகளுக்கு துணி வாங்கிக் கொடுக்கக் கூட அவருக்கு மனமில்லை. எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மகள் கிடையாது. என் தங்கை மகள்களைத்தான் சொந்த மகள்களாக நினைக்கிறேன்.

நன்றாக இருந்த என் தங்கையின் வாழ்க்கையை இப்படியாக்கிவிட்டாரே பிரகாஷ் ராஜ் என்று கூறியுள்ளார்


Post your comment

Related News
கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்
மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்
ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி
தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்
பெயர் மாற்றம் அவசியமில்லை : பிரகாஷ்ராஜ் அதிரடி
ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்
தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்கவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்
பிரகாஷ் ராஜ் , த்ரிஷாவிற்கு மேக்கப் செய்து நெகிழ வைத்த கமல்!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions