கன்னடத்தில் கவனம் செலுத்தும் பிரகாஷ்ராஜ்!

Bookmark and Share

கன்னடத்தில் கவனம் செலுத்தும் பிரகாஷ்ராஜ்!

கே.பாலசந்தர் இயக்கிய டூயட் படத்தில் தமிழுக்கு வந்தவர் பிரகாஷ்ராஜ். முன்னதாக, தனது தாய்மொழியான கன்னடத்தில் அரை டஜன் படங்களில் நடித்திருந்தார். ஆனபோதும், பின்னர் அவரது கவனம் தமிழ், தெலுங்கில் அதிகமானது.

ஒருகட்டத்தில் தமிழில் அதிகமான படங்களில் நடித்து வந்தவர், டூயட் மூவீஸ் என்ற நிறுனத்தை தொடங்கி பல படங்களை தயாரித்தார். அதோடு படங்களை இயக்கியும் நடித்தார்.

ஆனால் அப்படி அவர் இயக்கி நடித்த படங்களான டோனி, உன் சமையல் அறையில் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால் இயக்கத்தில் கவனம் செலுத்துவதை நிறுத்திய பிரகாஷ்ராஜ், ஹிந்தியிலும் மெகா வில்லனாக நடிக்கத் தொடங்கினார்.

ஆனால் இப்போது அங்கும் படவாய்ப்புகள் அவருக்கு குறைந்து விட்டதாம். அதோடு தமிழில் ஓ காதல் கண்மணிக்கு பிறகு கமலின் தூங்காவனம் படத்தில் மட்டுமே நடிப்பவர், தெலுங்கில் அதிக படங்களில் நடிக்கிறார்.

இந்த நேரத்தில் இதுவரை குறைவான சம்பளம் தருவார்கள் என்று சொல்லிக்கொண்டு தனது தாய்மொழியான கன்னட படங்களை தவிர்த்து வந்த பிரகாஷ்ராஜ். இப்போது அங்குள்ள டைரக்டர்களையும் அரவணைக்கத் தொடங்கியிருக்கிறார்.

அந்த வகையில், பிரியங்கா திரிவேதி நடிக்கும் பிரியங்கா என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த போலீஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.


Post your comment





Related News
கண் எதிரே நடந்த கொடுமை- ஓடிப்போய் உதவிய பிரகாஷ் ராஜ்
மலையாள சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
நேஷ்னல் மீடியாவை வெளுத்து வாங்கிய பிரகாஷ்ராஜ்
ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழக அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது: பிரகாஷ்ராஜ் பேட்டி
தனுஷின் இதயம் நொறுங்க காரணமானவரை பார்த்து வியக்கும் செல்லம் பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ்ராஜ் …நிஜ வாழ்க்கையிலும் கொடூர வில்லன்..! அந்த நடிகை சொல்றாங்க..ஐயோ..!?
பெயர் மாற்றம் அவசியமில்லை : பிரகாஷ்ராஜ் அதிரடி
ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்
தெலுங்கானாவில் கிராமத்தை தத்தெடுக்கவுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions