மீண்டும் ஒரே படத்தில் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ்

Bookmark and Share

மீண்டும் ஒரே படத்தில் கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ்

கமல்ஹாசன் நடித்துள்ள மூன்று படங்களான 'உத்தம வில்லன், பாபநாசம், விஸ்வரூபம் 2' ஆகிய படங்கள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில், அடுத்து நடிக்கும் புதிய படத்தின் வேலைகளில் கமல்ஹாசன் ஏற்கெனவே இறங்கிவிட்டார்.

அந்தப் புதிய படத்திற்காக லொகேஷன் பார்க்கும் வேலைகளை அவர் முடித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். அதற்காக அவர் மொரீஷியஸ் நாட்டிற்கும் சென்று வந்துள்ளார்.

இந்தப் புதிய படத்திற்கு 'ஓர் இரவு' என்று பெயர் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் இதற்கு முன் இணைந்து நடித்துள்ள 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், வேட்டையாடு விளையாடு' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன.  

இந்தப் படத்தின் கதை ஒரு இரவில் நடைபெறும் கதை என்றும் அதனால்தான்  ஒரு இரவு எனப் பெயர் வைத்திருக்கிறாராம் கமல். படத்தில் கண்டிப்பாக ஆன்ட்ரியாவும், பூஜா குமாரும் மட்டும் ஜோடியாக நடிக்க மாட்டார்கள் என எதிர்பார்க்கலாம்.

 


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions