ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்

Bookmark and Share

ராதிகாஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்த பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் இயக்கி தயாரித்து நாயகனாகவும் நடித்திருந்த தோனி படம் தமிழில் ராதிகா ஆப்தே என்ட்ரியான படம். அதற்கு முன்பு வரை இந்தி, பெங்காலி, மராத்தி படங்களில் நடித்து வந்தார்.

ஆனபோதும் அவர் வட இந்திய படங்களிலேயே அதிக கவனம் செலுத்திவந்ததால் தமிழில் அவரால் பெரிய இடத்துக்கு வர முடியாத நிலை. இருப்பினும், ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் போன்ற படங்களில் நடித்தார் ராதிகா ஆப்தே. இந்த நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில், தற்போது ரஜினியின் கபாலி படத்தில் அவர் நாயகியாகியுள்ளார்.

எத்தனையோ முன்னணி கதாநாயகிகள் இருந்தும் தமிழில் பிரபலமாகாத ராதிகா ஆப்தேவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. விளைவு, அந்த படத்தில் ஒப்பந்தமாகி விட்டார் என்ற செய்தி வெளியானதில் இருந்து கோலிவுட்டின் டாப்டென் நடிகை பட்டியலில் இடம் பிடித்து விட்டார் ராதிகா ஆப்தே.

மேலும் லண்டனைச் சேர்ந்த பெனடிக் டெய்லர் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியானதால் அவரை இரண்டாம்பட்சமாக பார்த்து வந்த கோலிவுட் இப்போது முதல்தர பட்டியலில் சேர்த்து விட்டது.

ஆக, ரஜினி பட நாயகி என்கிற அடையாளத்தோடு நடிகர் பிரகாஷ்ராஜை மும்பையிலுள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து, பெரிய நன்றியை தெரிவித்தாராம். 

அதில் அவர் பிரகாஷ்ராஜிடம் “அப்போது, என்னை நீங்கள் தமிழில் நடிக்க வைக்காமல் இருந்திருந்தால் வட இந்தியாவோடு எனது சினிமா எல்லை முடிந்திருக்கும். ஆனால் தமிழுக்கு சென்றதால் இப்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறேன்.இது உங்களால்தான். நீங்கள் என்னை தமிழுக்கு அழைத்து வந்ததால் தான் இத்தனை பெரிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது” என்று மனம் திறந்து பேசினாராம் ராதிகா ஆப்தே. 

ராதிகா ஆப்தேயின் நன்றியுணர்வை கண்டு மெய்சிலிர்த்து நின்றாராம் பிரகாஷ்ராஜ்.


Post your comment





Related News
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
தயக்கமில்லாமல் பேச ஆரம்பிப்பதே விழிப்புணர்வின் முதல்படி - ராதிகா ஆப்தே
வாய்ப்புக்காக போன் செக்ஸ், பிரபல நடிகை பகீர் தகவல் - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
மிகவும் கவர்ச்சியான நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டு வைரல் ஆன ராதிகா ஆப்தே
டிவி ஷோவில் அனைவரது முன்பும் சட்டை, பேண்ட்டை கழற்றிய முன்னணி நடிகர்!
அதிக சம்பாதிக்கும் பிரபல நடிகைக்கே இப்படி ஒரு நிலைமையா!
திரையுலகத்தை மறந்துவிட்டு ராம்கோபால்வர்மா வீட்டில் ஓய்வு எடுக்கலாம் - பிரபல நடிகை கருத்து
மிக பெரிய தமிழ் நடிகரை ஓங்கி அறைந்த சூப்பர் ஸ்டார் நாயகி - அதிர்ச்சி தகவல்.!
அந்த இடத்துல பிகினி போடாம அதையா அணிய முடியும்? - கவர்ச்சி பற்றி ஓபனாக பேசிய பிரபல நடிகை.!
பிகினியில் பாய் பிரண்ட்டுடன் பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions