இந்தியில் ரீமேக் ஆகும் ’’உன் சமையல் அறையில்’’

Bookmark and Share

இந்தியில் ரீமேக் ஆகும் ’’உன் சமையல் அறையில்’’

தமிழில் சினேகா, பிரகாஷ்ராஜ் இணைந்து நடித்த உன் சமையல் அறையில் படம் இந்தியில் தயாராகிறது. இப்படத்தில் ஸ்ரேயா நாயகியாக நடிக்கிறார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரிப்பாளராக மட்டுமின்றி, டோனி, உன் சமையல் அறையில் உள்ளிட்ட படங்களை இயக்கியும் உள்ளார். இதில், உன் சமையல் அறையில் படம் மலையாளத்தில் வெளியான சால்ட் அண்ட் பெப்பர் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

இப்படத்தை தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் இயக்கிய பிரகாஷ்ராஜ், தற்போது இந்தியிலும் தயாரித்து, இயக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியில் தட்கா எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நானா படேகர் பிரகாஷ்ராஜ் வேடத்தில் நடிக்க, சினேகா வேடத்தில் ஸ்ரேயா நடிக்கிறார்/

தமிழில் புதிய படவாய்ப்புகள் இல்லாத நிலையில், த்ரிஷியம் படத்தின் இந்தி ரீமேக்கில் நாயகியாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார். தட்கா அவருக்கு இந்தியில் இரண்டாவது படம்.

தட்கா படம் மூலம் இந்தியில் தனக்கு மேலும் பல புதிய படவாய்ப்புகள் அமையும் என ஸ்ரேயா எதிர்பார்க்கிறாராம். இப்படத்தில் ஸ்ரேயா மட்டுமின்றி மற்றொரு நாயகியாக டாப்ஸியும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



Post your comment





Related News
சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார்? - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.!
உங்க பொண்டாட்டி ட்விட்டரில் இல்லைனு இப்படி செய்யலாமா? - பிரியாவால் சிக்கிய பிரபலம்.!
இந்த நடிகருடன் ஒருமுறையாவது நடிக்கவேண்டும்! பிரியா வாரியரின் ஆசை
நடிகர்கள் அரசியல் தலைவராவது நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ் ராஜ்
நிவின் பாலிக்கு தந்தையாக நடிக்கும் பிரகாஷ் ராஜ்!
மீண்டும் தள்ளிப்போன கோ 2 ரிலீஸ் தேதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions