63-வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!

Bookmark and Share

63-வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!

2015 ஆம் ஆண்டுக்கான 63-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

சிறந்த நடிகராக அமிதாப்பச்சனும், சிறந்த நடிகையாக கங்கான ரெனாவத்தும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த படமாக பாகுபலி அறிவிக்கப்பட்டது. சிறந்த இயக்குனராக பாஜிரோ மஸ்தானி படத்தினை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலிக்கு அறிவிக்கப்பட்டது.

தமிழில் சிறந்த படமாக விசாரணை தேர்வு செய்யப்பட்டது.  அதேபோல் விசாரணை படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது சமுத்திரக்கனிக்கும், சிறந்த படத்தொகுப்பாளராக மறைந்த கிஷோரும் தேர்வு செய்யப்பட்டனர். இறுதி சுற்றில் நடித்த ரித்திகா சிங்கிற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது.

சிறந்த இசையமைப்பாளராக  தாரை தப்பட்டை படத்திற்கு பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 63-வது தேசிய திரைப்பட விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று வழங்கினார். விஞ்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.  

இந்த நிகழ்ச்சியில் தாதா சாகேப் விருது இந்தி நடிகர் மனோஜ் குமாருக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நிதிமந்திரி அருண் ஜெட்லி, மத்திய மந்திரி ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Post your comment





Related News
பெண் குழந்தையை ஈன்றெடுத்த நடிகை ராணி முகர்ஜி
தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் கமாலினி முகர்ஜி
ராணி முகர்ஜிக்கு தேசிய விருது
அதெப்படி ‘மர்தானி’ படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் தரலாம்... ராணி முகர்ஜி ஆவேசம்
ராணி முகர்ஜியின் புதிய படத்தை பார்க்காதீர்கள்: குழந்தைகளுக்கு அமீர்கான் அட்வைஸ்
\'ராணி முகர்ஜி- ஆதித்யா சோப்ரா\' இத்தாலியில் திடீர் திருமணம்..!
அமிதாப்பச்சனுடன் சேர்ந்து படம் பார்த்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி..!
திரைத் துறையில் சாதனை: முதல்வர் ஜெயலலிதா உட்பட 41 பேருக்கு பதக்கம் வழங்கிய குடியரசுத் தலைவர்.
ராணி வாய்ப்பை தட்டிப்பறித்த கரீனா - வருத்தத்தில் ராணி முகர்ஜி.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions