பிரபல ஹீரோ படத்தில்தான் நடிப்பாராம் ப்ரணிதா!

Bookmark and Share

பிரபல ஹீரோ படத்தில்தான் நடிப்பாராம் ப்ரணிதா!

அருள்நிதி நடித்த உதயன் படத்தில் தமிழுக்கு வந்தவர் ப்ரணிதா. அதையடுத்து கார்த்தியின் சகுனியில் நடித்தபோது தமிழில் அடுத்து பெரிய ரவுண்டு வரப்போகும் நடிகை என்கிற பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால், அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.

முக்கியமாக தமிழில் பின்னர் ஒரு படம்கூட அவரக்கு புக்காகவில்லை. அதனால் பெரிய ஏமாற்றத்துடன் மீண்டும் தெலுங்கு, கன்னட படங்களில் நடிக்க சென்றுவிட்டார் ப்ரணிதா.

அதோடு, அங்கு பெரிய நடிகர்களின் படங்கள் கிடைக்காமல் காமெடி ஹீரோக்களுடனெல்லாம் டூயட் பாடிக்கொண்டிருந்த ப்ரணிதா, சில தெலுங்கு படங்களில் இரண்டாவது நாயகியாகவும் நடித்து மார்க்கெட்டில் இருந்து வந்தார்.

இந்த நேரம்தான், மாஸ் படத்தில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக இன்னொரு நாயகியாக கமிட்டாகியிருந்த எமி ஜாக்சன், அப்படத்திலிருந்து விலகியதை அடுத்து, அந்த வேடத்துக்கு கமிட்டனார் ப்ரணிதா.

அதோடு, இரண்டாவது நயாகி வேடம் என்றபோதும் சூர்யா படம் என்பதால் இந்த படத்திற்கு பிறகு தமிழ் சினிமா கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் நடித்திருக்கும் அவர், சமீபத்தில் தன்னைத்தேடி வந்த ஒரு பிரபலமில்லாத ஹீரோவின் படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.

அதோடு, அடுத்தடுத்து பிரபலமான நடிகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் கோலிவுட்டில் கூறி வருகிறார் ப்ரணிதா.


Post your comment





Related News
ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை
பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா
இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!
ஜெய் ஜோடியாக நடிக்கும் பிரணீதா!
தாத்தா, பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகை பிரணிதா பேட்டி
கார் கவிழ்ந்து விபத்து: நடிகை பிரணிதா உயிர் தப்பினார்
ப்ரணிதாவை ஏமாற்றிய கோலிவுட்!
பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்
ப்ரணிதாவின் கோலிவுட் கனவு கலைந்தது!
ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions