ப்ரணிதாவை ஏமாற்றிய கோலிவுட்!

Bookmark and Share

ப்ரணிதாவை ஏமாற்றிய கோலிவுட்!

அருள்நிதி நடித்த உதயன் படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகை ப்ரணிதா. அதன்பிறகு அவர் கார்த்தியுடன் சகுனி படத்தில் நடித்தபோது பரபரப்பாக பேசப்பட்டார்.

அதனால் கோலிவுட்டின் முன்னணி நடிகைகளே அந்த சமயத்தில் ப்ரணிதாவை கண்டு பயந்தனர். ஆனால் அவர்கள் பயந்தது போன்று எதுவும் நடக்கவில்லை. காரணம், சகுனி படம் தோல்வியடைந்ததால் அடுத்தபடியாக ப்ரணிதாவுக்கு தமிழில் படமே இல்லை.

அதனால் மறுபடியும அவர் தெலுங்கு, கன்னடம் என்று நடிக்க சென்று விட்டார். இந்த நிலையில், மாஸ் படத்தில் மறுபடியும் நடித்த ப்ரணிதா, அந்த படத்தில் இரண்டாவது ஹீரோயின் என்றபோதும் சூர்யா படம் என்பதால், இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே புதிய படங்களில் கமிட்டாகி விட வேண்டும் என்று தீவிர முயற்சிகளில் இறங்கினார். ஆனால் யாருமே ப்ரணிதாவை கண்டுகொள்ளவில்லை.

அதோடு வழக்கம்போல் அவர் தமிழில் மூன்றாவதாக நடித்த படமும் தோல்வியடைந்து விட்டது. விளைவு, இப்போது ப்ரணிதா ராசியில்லாத நடிகை என்று கோலிவுட் முத்திரை குத்தி விட்டது. அதனால் பெரிய எதிர்ப்பார்ப்போடு வந்த ப்ரணிதா, பெரிய ஏமாற்றத்துடன் மறுபடியும் வந்தவழியே திரும்பிச்சென்று விட்டார்.


Post your comment





Related News
ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை
பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா
இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!
ஜெய் ஜோடியாக நடிக்கும் பிரணீதா!
தாத்தா, பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகை பிரணிதா பேட்டி
கார் கவிழ்ந்து விபத்து: நடிகை பிரணிதா உயிர் தப்பினார்
பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்
ப்ரணிதாவின் கோலிவுட் கனவு கலைந்தது!
ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
பிரபல ஹீரோ படத்தில்தான் நடிப்பாராம் ப்ரணிதா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions