தாத்தா, பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகை பிரணிதா பேட்டி

Bookmark and Share

தாத்தா, பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகை பிரணிதா பேட்டி

சிறுவயதில் நமக்கெல்லாம் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்த்து ஆளாக்கிய தாத்தா பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள் என்று நடிகை பிரணிதா கூறினார்.

சூர்யா ஜோடியாக மாஸ், கார்த்தியுடன் சகுனி, மற்றும் உதயன் படங்களில் நடித்து தமிழ் பட உலகில் பிரபலமானவர் பிரணிதா. தெலுங்கு-கன்னட மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். வயதான தாத்தா பாட்டிகளை கவனிக்கும்படி இளைஞர்களுக்கு பிரணிதா வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து பெங்களூருவில் பிரணிதா அளித்த பேட்டி வருமாறு;-

‘‘வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் அப்பா, அம்மா நமக்கு துணையாக இருக்கிறார்கள். தேர்வு நேரங்களில் அவர்களின் பதற்றங்களை எல்லோரும் பார்த்து இருப்போம். நன்றாக தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக வேலைகளுக்கு நடுவிலும் பிள்ளைகளை பற்றிய சிந்தனையாகவே இருப்பார்கள். இரவில் நன்றாக படிக்கிறார்களா? என்று விழித்து இருந்து கவனிப்பார்கள்.

அவர்களைப்போலவே இன்னும் இரண்டு ஜீவன்கள் நம்மை அக்கறையாக கவனித்துக் கொள்வார்கள். அவர்கள் வேறு யாரும் அல்ல, தாத்தாவும் பாட்டியும்தான்.

பேரப்பிள்ளைகள் தேர்வுக்கு படிக்கும்போது அருகில் இருந்து காப்பி கொடுப்பது, உணவு தருவது என்று உதவிகள் செய்வார்கள். தேர்வை நன்றாக எழுத வேண்டும் என்ற பதற்றம் அவர்களுக்கும் இருக்கும்.

நான் பத்தாம் வகுப்பு பொது தேர்வை எழுதிய போது எனது பாட்டி இரவில் தூங்காமல் விழித்து இருந்து உதவிகள் செய்தது இப்போதும் என் நினைவுக்கு வருகிறது. கன்னடம் எனக்கு சரியாக வராது. இதற்காக எனது பாட்டி என்னுடைய கன்னட பாட புத்தகத்தை படித்து எனக்கு சொல்லிக்கொடுத்தார். அந்த தாத்தா, பாட்டிகளை பேரப்பிள்ளைகள் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்ததும் கண்டுகொள்வது இல்லை.

வேலைப்பளு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவர்களை மறக்கடிக்க செய்து விடுகிறது. வயது முதிர்ந்து நினைவு இழந்த பிறகு உதவிகள் செய்தாலும் அது அவர்களுக்கு புரிவது இல்லை. எனவே தாத்தா பாட்டிகள் நன்றாக இருக்கும்போதே அவர்களுக்கு உதவி செய்து தேவைகளை கவனியுங்கள்.

வீட்டில் எனது பாட்டி இருக்கும் அறையை இப்போது நான் தாண்டிப் போகும் போதெல்லாம் அவர் வாயில் ஏதேதோ புரியாத மொழியில் பேசிக்கொண்டு இருப்பதை கேட்டு வருந்துகிறேன். ஒரு குழந்தையாக மாறிவிட்டார்.

அவருக்கு இப்போது நான் என்ன உதவி செய்தாலும் அது அவருக்கு தெரியப்போவது இல்லை. அவருக்கு பக்கத்தில் இருந்து அவர் பேசும் மொழியை புரிந்து கொள்ள நேரம் ஒதுக்கப்போகிறேன்.

சிறுவயதில் நமக்காக வாழ்ந்த தாத்தா பாட்டிகளை அவர்கள் நல்ல நினைவோடு இருக்கும்போதே கவனிக்க இளைஞர்கள் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பிரணிதா கூறினார்.


Post your comment





Related News
ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை
பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா
இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!
ஜெய் ஜோடியாக நடிக்கும் பிரணீதா!
கார் கவிழ்ந்து விபத்து: நடிகை பிரணிதா உயிர் தப்பினார்
ப்ரணிதாவை ஏமாற்றிய கோலிவுட்!
பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்
ப்ரணிதாவின் கோலிவுட் கனவு கலைந்தது!
ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா
பிரபல ஹீரோ படத்தில்தான் நடிப்பாராம் ப்ரணிதா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions