எந்தப் பிரச்சனையும் செய்யாத பிரணீதா!

Bookmark and Share

எந்தப் பிரச்சனையும் செய்யாத பிரணீதா!

ஒரு படத்தின் தோல்வி நல்ல நட்சத்திரங்களைக் கூட பாதித்து விடுகிறது. இன்றைய சூழ்நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கும் ஒரு சில நட்சத்திரங்களைப் பற்றித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்காத ஒரு நடிகை, இந்தக் காலத்தில் இப்படி ஒருவரா என ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நடிகை பிரணீதா. கார்த்தி ஜோடியாக 'சகுனி' படத்தில் நடித்தார்.

அந்தப் படம் தோல்வியடைந்ததால் தொடர்ந்து தமிழில் அவருக்கு யாரும் வாய்ப்புகளைத் தரவில்லை. இருந்தாலும் தெலுங்கில் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் அங்கு தொடர்ந்து சில வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'மாஸ்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படப்பிடிப்புக்கு வரும் போது எந்தப் பிரச்சனையும் செய்யாமல், தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் மிகவும் புரொபஷனலாக நடந்து கொள்கிறாராம்.

கேரவன் வேண்டும், விமானப் பயணத்தில் பிசினஸ் கிளாஸ் வேண்டும் என்றெல்லாம் கேட்பதில்லையாம். என்னை விட பெயர் பெற்றவர்களே எகானமி வகுப்பில் பயணிக்கும் போது நான் எகானமி வகுப்பில் பயணிப்பது சரிதான் எனப் பேசி நெகிழ வைக்கிறாராம்.சூர்யாவுடன் பிரணீதா நடித்துள்ள 'மாஸ்' படம் வெற்றியடைந்து அவருக்கு இங்கும் ஒரு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தித் தரட்டும்.


Post your comment





Related News
ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை
பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா
இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!
ஜெய் ஜோடியாக நடிக்கும் பிரணீதா!
தாத்தா, பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகை பிரணிதா பேட்டி
கார் கவிழ்ந்து விபத்து: நடிகை பிரணிதா உயிர் தப்பினார்
ப்ரணிதாவை ஏமாற்றிய கோலிவுட்!
பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்
ப்ரணிதாவின் கோலிவுட் கனவு கலைந்தது!
ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions