பிரணீதாவை சுற்றி வளைத்த ரசிகர்கள்

Bookmark and Share

பிரணீதாவை சுற்றி வளைத்த ரசிகர்கள்

கடை திறப்பு விழாக்களில் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான். ஒரு பக்கம் வருமானமும் வரும் இன்னொரு பக்கம் திரண்டிருக்கும் ரசிகர்களைப் பார்க்கும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் கடை திறப்புகளில் நட்சத்திரங்கள் கலந்து கொள்வது ஓரளவுக்கு குறைவாகவே இருக்கும். ஆனால், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தினசரி ஏதாவது ஒரு கடை திறப்பு விழாவில் யாராவது ஒரு நடிகை கலந்து கொண்டேயிருப்பார்.

அங்கு நட்சத்திரங்கள் மீது ரசிகர்களின் ஆர்வம் இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. சமந்தா, தமன்னா, காஜல் அகர்வால், பிரணீதா, அஞ்சலி என தெலுங்கில் இருக்கும் அனைத்து முன்னணி ஹீரோயின்களுமே கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.

சமீபத்தில் நடிகை பிரணீதா, விஜயவாடாவில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட போது எக்கச்சக்கமான கூட்டம் கூடி, பிரணீதாவையே நெருக்கித் தள்ளி விட்டார்களாம். சிலர் அவரைத் தொட்டுப் பார்க்கவும் முயன்றிருக்கிறார்கள்.

இதனால், கோபமடைந்த பிரணீதா, ரசிகர்கள் வட்டத்திற்குள் இருந்து வெளியேற மிகவும் சிரமப்பட்டாராம். இப்படி நடப்பது முதல் முறையல்ல, இதற்கு முன் சில ஹீரோயின்கள் ரசிகர்களை அடித்த சம்பவங்களும் அங்கு நடந்திருக்கிறது. தெலுங்கில் வெற்றிகரமான நடிகையாக வலம் வரும் பிரணீதா தற்போது தமிழில் சூர்யாவுடன் 'மாஸ்' படத்தில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
ஏன், ஏன் என்னால மட்டும் முடியல: நொந்து நூடுல்ஸாகும் நடிகை
பார்க்க பச்சப்புள்ள மாதிரி இருந்துக்கிட்டு வில்லத்தனம் செய்த நடிகை பிரணிதா
இணைந்து நடித்த சில நாட்களில் தோழிகளான ஐஸ்வர்யா ராஜேஷ்-பிரணிதா!
ஜெய் ஜோடியாக நடிக்கும் பிரணீதா!
தாத்தா, பாட்டிகளை கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்: நடிகை பிரணிதா பேட்டி
கார் கவிழ்ந்து விபத்து: நடிகை பிரணிதா உயிர் தப்பினார்
ப்ரணிதாவை ஏமாற்றிய கோலிவுட்!
பரினீதி சோப்ராவின் புதிய அவதாரம்
ப்ரணிதாவின் கோலிவுட் கனவு கலைந்தது!
ஷூட்டிங்கில் சூர்யா - கார்த்தி எப்படி? ஒப்பிடுகிறார் பிரணிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions