இந்து மதத்தை கொச்சைப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டமே: பிரசன்னா கோபம்

Bookmark and Share

இந்து மதத்தை கொச்சைப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டமே: பிரசன்னா கோபம்

உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம் தான் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார். நடிகர் பிரசன்னா பட வேலைகளில் பிசியாக இருந்தாலும் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். படங்கள் குறித்து மட்டும் அல்லாமல் நாட்டு நடப்புகள் குறித்தும் ட்வீட்டி வருகிறார். இந்நிலையில் அவர் நித்யானந்தா பற்றி ட்வீட்டியுள்ளார்.

உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்படவேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு என்று கொந்தளித்துள்ளார் பிரசன்னா. 

அண்ணன் வைரமுத்து பத்தி வாய் திறக்க மாட்டேள்...ஆனா நித்யானந்தா பத்தி பேசுவெள்.. நீயெல்லாம் இந்து.. பயந்து நடுங்காதே எதிர்த்து உயிர் விடு!! இல்லேனா மூடிட்டு இரு.. உனக்கு அந்த பெண்கள் எவ்வளவோ மேல்..என்று ஒருவர் பிரசன்னாவின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார். 

நம் இந்துமதம் ஒருபோதும் தரம் தாழ பழக்கவில்லையே அன்பரே. மனதார சொல்லுங்கள் உங்களுக்கு அவர்கள் செயல் சரியென படுகிறதா? சிறுவயதில் உபன்யாசங்கள் மார்கழி மாதம் அதிகாலை பஜனை என்று பக்தி பழகிய எனக்கு ஆண்டாளின் பெருமை யாரோ சொல்ல வேண்டியதில்லை என்றார் பிரசன்னா. 

வைரமுத்துக்கு நித்யானந்தா என்று இன்னொரு பெயர் உண்டா !இருக்கலாம்!தாயாரை இழிவுபடுத்தி ஆனந்தமாய் இருக்கிறார் என்று ஒருவர் கூறியதை பார்த்த பிரசன்னா, ஒரு சாதாரண மனிதனின் வார்த்தைகளைக்காட்டிலும் ஆண்டாளின் பெருமை மிகப்பெரியதன்றோ ஸ்வாமி? தெய்வத்திற்கு பழியுண்டோ? என்று கேட்டுள்ளார். 


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions