பிரசன்னா நடிக்கும் கதை சொல்லப்போறோம்!

Bookmark and Share

பிரசன்னா நடிக்கும் கதை சொல்லப்போறோம்!

புலிவால், நேற்று இன்று, கல்யாண சமையல் சாதம் படங்களில் நடித்த பிறகு பிரசன்னாவுக்கு படங்கள் கிடைக்கவில்லை. அதனால் சொந்த பட நிறுவனம் தொடங்கி அதில் தான் ஹீரோவாக நடிக்கப்போவதாக கதை கேட்டு வந்தார்.

ஆனால், எதிர்பார்த்தபடி பைனான்ஸ் தர யாரும் முன்வராததால் அந்த முயற்சியை கிடப்பில் போட்டு விட்டார்.  அதன்பிறகு, ஹீரோ வேசம்தான் கிடைக்கவில்லை. வில்லன், வித்தியாசமான கேரக்டர் என்று நடித்தாவது சினிமாவில் நீடிப்போம் என்று சில டைரக்டர்களை துரத்தினார்.

ஆனால், திருமணத்திற்கு பிறகு சினேகாவை தவிர்த்தது போன்று பிரசன்னாவையும் இயக்குனர்கள் தவிர்த்தனர். இதனால் பல மாதங்களாக படவாய்ப்பே இல்லாமல் இருந்து வந்த பிரசன்னாவுக்கு இப்போது காத்தாடி படத்தை இயக்கிய கல்யாண் அடுத்து இயக்கும் கதை சொல்லப்போறோம் என்ற படத்தில் நாயகன் வாய்ப்பே கிடைத்திருக்கிறது.

கல்யாண சமையல் சாதம் படத்தில் நடித்தது போன்று இதுவும் விவகாரமான கதையா? இல்லை வித்தியாசமான கதையா? என்பது தெரியவில்லை. ஆனால், எதுவாக இருந்தாலும் ஓகே.

இப்போதைக்கு சான்ஸ் கிடைத்ததே பெரிய விசயம் என்று ஜூலை முதல் கதை சொல்லப்போறோம் படத்தில் நடிக்கத்தயாராகிக்கொண்டிருக்கிறார் பிரசன்னா.

 


Post your comment





Related News
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
2G வழக்கு தீர்ப்பு பற்றி பிரபல நடிகரின் அதிரடி பதிவு.!
`திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
விஜய்யின் மெர்சல் போஸ்டரை செய்தது இவர் தான்!
`ப.பாண்டி'யை தொடர்ந்து அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரசன்னா
நான் கஷ்டப்படும் போதும் அவர் தான் பார்த்துக்கொண்டார்- பிரசன்னா நெகிழ்ச்சி
தனுஷை தப்பாக தான் நினைத்தேன் - பிரசன்ன ஓபன் டாக்
விவசாயிகளுக்காக பிரசன்னா, சிநேகா செய்த செயல்
`அஞ்சாதே' படத்திற்கு பிறகு மீண்டும் வில்லனாகும் பிரசன்னா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions