கேமராமேன் வின்சென்ட் மறைவுக்கு பிரதாப் போத்தன் இரங்கல்..!

Bookmark and Share

கேமராமேன் வின்சென்ட் மறைவுக்கு பிரதாப் போத்தன் இரங்கல்..!

மரணம் அடைந்த பழம்பெரும் கேமராமேன் ஏ.வின்சென்ட்டின் சொந்த ஊர், கேரள மாநிலம் கோழிக்கோடு. 1956-ஆம் ஆண்டு வெளியான "அமர தீபம் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து "கல்யாண பரிசு, "உத்தமபுத்திரன், "கௌரவம், "சவாலே சமாளி, "வசந்த மாளிகை, "எங்க வீட்டு பிள்ளை உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மலையாளத் திரையுலகிலும் முத்திரை பதித்துள்ள வின்சென்ட் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் வின்சென்ட்டின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளதுடன் அவருக்கும் தங்கள் குடும்பத்திற்குமான பிணைப்பையும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.

“நான் வின்சென்ட் சாரை சந்தித்து துலாபாரம்" படத்தின் மலையாள ரீமேக் படப்பிடிப்பு நடந்துபோதுதான். அவரது அமைதியான பேச்சு, அவரை சாப்ட்டான டெக்னீசியனாக என் மனதில் ஏற்றிவைத்துவிட்டது.

அன்றிலிருந்து பல வருடங்களாக குடும்ப நண்பராக விளங்கியவர் வின்சென்ட்.. என்னுடைய அண்ணன் ஹரி போத்தன் தயாரிப்பாளராக அறிமுகமான முதல் படத்திற்கு வின்சென்ட் தான் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அவரது மறைவு எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions