இளையராஜா 1000-வது விழா மிக மோசமான நிகழ்ச்சி : பிரதாப் போத்தன்

Bookmark and Share

இளையராஜா 1000-வது விழா மிக மோசமான நிகழ்ச்சி : பிரதாப் போத்தன்

பழம்பெரும் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் தனது முகநூல் பக்கத்தில் விஜய் டிவியின் ‘இளையராஜா1000’ நிகழ்ச்சி குறித்து மிகவும் வருத்தத்துடன் ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்,

ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞரின் மரியாதைக்குரிய நிகழ்ச்சி பலரின் சங்கடத்திற்கு ஆளாகியுள்ளது. முக்கியமாக நட்சத்திரங்கள், ரசிகர்களின் நன்மதிப்பைப் பெறத் தவறியுள்ளது. இந்நிலையில் நிகழ்ச்சியின் விருந்தினர்களில் ஒருவரான பிரதாப் போத்தன் தனக்கு நேர்ந்த சங்கடத்தைப் பதிவிட்டுள்ளார். அவர் முகநூலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்....

ஏகப்பட்ட அழைப்புகள், நான் இயக்குநர்கள் குழுவிலும் , நடிகர்கள் குழுவிலும் இருப்பதாகத் தெரிவித்தார்கள். நானும் அதை நம்பினேன். ஏனெனில் இளையராஜாவின் சிறந்த சில பாடல்கள் என்னை வைத்துப் படமாக்கப்பட்டுள்ளது.

அதே போல் ஒரு இயக்குநராக இதுவரை சரியில்லாத பாடல்களை அவர் என் படங்களுக்குக் கொடுத்ததே இல்லை. கடைசியாக நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த யாத்ரா மொழி, மற்றும் வரவிருக்கும் ஒரு மலையாளம் படம் என அனைத்தும் நல்ல பாடல்கள்.

சரி நான் சீக்கிரம் சென்றைடைய வேண்டியிருந்த இந்த விஜய் டிவியின் நிகழ்ச்சிக்கு வருவோம். அப்போது தான் நான் இளையராஜாவின் ஆசியைப் பெற முடியும் என நினைத்து வந்து சேர்ந்தேன்.

ஒரு பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி அளவிற்கே ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருந்தது விஜய் டிவி. என்னுடைய பாடல்கள் எதுவும் அங்கே அரங்கேற்றப்படவில்லை. கௌதம் மேனனின் பாடல்கள் வரிசையில் மட்டும் என் இனிய பொன் நிலாவே, மற்றும் கோடைகாலக் காற்றே பாடல்கள் பாடப்பட்டன.

பிறகு இயக்குநர்கள் வரிசையிலும் நான் அழைக்கப்படவில்லை. எனக்கு அது பெரிதாக பாதிக்கவில்லை. காரணம் எனது சர்க்கரை அளவு அதிகமானதால் இயற்கை அழைப்பு. அதனால் எழுந்து சென்றுவிட்டு வந்தால் அப்போதும் இயக்குநர்கள் விடாமல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

பிறகு நடிகைகள் பேச்சு இப்படி எல்லாம் கமலின் வருகையை பிரகடனப்படுத்தவே நடந்தன. எல்லாம் முடிந்து ’லார்ட் ஆஃப் தி ரிங்’ பாணியில் காத்திருந்தமைக்கு விருந்தாக சுமார் 11 மணியளவில் மணிரத்னத்தின் ’கீதாஞ்சலி’ பட ஓ பிரியா, பிரியா பாடல் பாடப்பட்டது. அப்போது நான் கிளம்ப ஆயத்தமானேன்.

அந்நேரம் நிகழ்ச்சியின் பொறுப்பாளரான பெண் ஒருவர் வந்து அடுத்து நீங்கள் தான். மலையாள நடிகர்கள் சார்பாக நீங்களும், ஜெயராமும் மேடையேறவேண்டும் எனக் கூறினார்.

ஒரு இயக்குநராக நான் அவருடன் ஒரு படம் இயக்கியிருக்கிறேன் என்றால் அந்தப் பெண் கறாராக நீங்கள் இருந்தே ஆக வேண்டும் நடிகர்கள் வரிசையில் கண்டிப்பாகப் பேச வெண்டும் என அடம்பிடித்தார். ஆனால் நான் கிளம்பிவிட்டேன்.

இந்த விஜய் டிவியின் எப்போதுமான சம்பவாமி யுகே யுகே அட்டூழியங்களால் ருபெர்ட் முர்டொக்கின் (ஸ்டார் டிவியின் நிறுவனர்) பெயரைக் கெடுக்கிறார்கள். ஒரு மேஸ்ட்ரோவுக்கு மரியாதை செய்யும் பாணி இதுவல்ல. நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான நிகழ்ச்சி இது தான் என  கோபமாகப் பதிவிட்டுள்ளார் பிரதாப் போத்தன்.

இளையராஜா இசை நிகழ்ச்சியில் ராஜா இசை மழையில் நனைய வைப்பார் என சென்றிருந்த பலருக்கும்  ஏமாற்றமான நிகழ்ச்சியாகவே அமைந்திருந்தது விஜய் டிவியின் ‘இளையராஜா1000” நிகழ்ச்சி. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions