“கவனமாக இரு” - பிரதாப் போத்தனை எச்சரித்த நண்பர்கள்..!

Bookmark and Share

“கவனமாக இரு” - பிரதாப் போத்தனை எச்சரித்த நண்பர்கள்..!

சமீப நாட்களில் தனது பரபரப்பான பேஸ்புக் கருத்துகளால் அதிகம் சர்ச்சைகளில் அடிபடுபவர் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். அப்படி சமீபத்தில் நடிகர் ஜெயராம் குறித்து அவர் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அதில் தனது அண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெயராம், தனது அண்ணன் இறந்தபோது அவருக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூட வரவில்லை என்றும் புத்தகங்களை படித்து மனிதனாக இருக்க அவர் கற்றுக்கொள்ளட்டும் என்றும் காரசாரமாக தாக்கியிருந்தார். இதற்கு ஜெயராம் எந்தவித ரியாக்சனோ, பதிலடியோ தரவில்லை. ஆனால் ஜெயராமின் ரசிகர்கள் பேஸ்புக் மூலமாக தனது கண்டனங்களை பிரதாப் போத்தனுக்கு தெரிவித்து வந்தனர்..

இன்னும் ஒரு சில ரசிகர்கள் பிரதாப் போத்தன் மீது தாக்குதல் நடத்தக்கூட திட்டமிட்டதாக தெரிகிறது. இதனை அறிந்த அவரது நட்பு வட்டாராம் பிரதாப் போத்தனிடம் இதனை தெரிவித்து, “கொஞ்சம் கவனமாக இரு.. அவர்கள் உன் மீது தாக்குதல் நடத்தலாம்..

நிச்சயம் செய்யக்கூடிய ஆட்கள் தான்” என எச்சரித்துள்ளனராம். இந்த தகவலையும் பிரதாப் போத்தன் தான் தெரிவித்துள்ளார்.  

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions