நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

Bookmark and Share

நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை பிரதியுஷா (வயது24). இந்தி தொடர்களில் நடித்து பிரபலமான இவர், கடந்த ஏப்ரல் 1-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் ராகுல் சிங்குடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி கொடுத்த புகாரின் பேரில் பங்கூர் போலீசார் ராகுல் சிங் மீது பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து ராகுல் சிங் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக மும்பை ஐகோர்ட்டை அணுகி முன்ஜாமீன் பெற்றார்.

இந்த நிலையில், நேற்று போலீசார் பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலன் ராகுல் சிங்கிற்கு எதிராக 1,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

அதில், ராகுல் சிங் மீது தற்கொலைக்கு தூண்டுதல், தாக்குதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions