பிசாசு கதாநாயகியை தாக்கிய மேக்கப் மேன்

Bookmark and Share

பிசாசு கதாநாயகியை தாக்கிய மேக்கப் மேன்

மிஷ்கின் இயக்கிய பிசாசு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரயாகா மார்டின். இவர் தற்போது பி.டி. குஞ்சு முகமது இயக்கத்தில் விஸ்வாசபூர்வம் மன்சூர் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் மேக்கப் எதுவும் போடாமல் யதார்த்தமாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவரை மேக்கப் மேன் தரை குறைவாக பேசி தாக்கியுள்ளதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் படத்தில் நான் இஸ்லாமிய பெண்ணாக நடிக்கிறேன். அதனால் மேக்கப் தேவையில்லை என்றார்கள்.

சம்பவத்தன்று அதிகாலை 4.30 மணிக்கு நான் செட்டுக்கு சென்றேன். முகம் டல்லாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் தெரிவித்தார். இதையடுத்து மேக்கப் மேனிடம் சென்று டல்லாக மேக்கப் போடுமாறும் கூறினேன். ஆனால் அவர் என்னை கேவலமாக பார்த்ததுடன், அசிங்கமாகவும் பேசினார். படப்பிடிப்பு முக்கியம் என்பதால் அதை கவனிக்காதது போன்று இருந்தேன்.

படப்பிடிப்பு முடிந்த பிறகு நடந்ததை என் அம்மாவிடம் கூறினேன். அவர் வந்து கேட்டதற்கும் மேக்கப் மேன் கண்டபடி திட்டினார். மரியாதையாக பேசுமாறு நான் விரலை நீட்ட அவர் என்னை கையை முறுக்கி அடித்துவிட்டார்.

ஆனால் அவர் தனது நண்பரான ஆர்ட் டைரக்டரை வைத்து நான் அவரை தாக்கியதாக ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட வைத்துள்ளார். இதனால் என்னை தாக்கமுயன்ற மேக்கப் மேன், தவறாக பேஸ்புக்கில் போஸ்ட் பட்ட ஆர்ட் டைரக்டர் இருவர் மீதும் காவல் துறையில் புகார் கொடுக்க போகிறான் என்று தெரிவித்துள்ளார்


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions