41 வயதில் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா

Bookmark and Share

41 வயதில் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா

பாலிவுட் திரையுலகில் இளைஞர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் பிரீத்தி ஜிந்தா. தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘உயிரே’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

பாலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த பிரித்தி ஜிந்தா, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் ஒரு பங்குதாரராகவும் விளங்கினார். 

சில ஆண்டுகளாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு கிரிக்கெட், நண்பர்களுடன் ஜாலியாக உலகம் சுற்றுவது என பொழுதை போக்கி வந்த பிரித்தி ஜிந்தா, தற்போது திருமண பந்தத்துக்குள் நுழைந்துள்ளார். 

41 வயதான பிரீத்தி ஜிந்தா தன்னுடைய நீண்டநாள் காதலரான ஜீன் குட்டினெப்பை நேற்று முன்தினம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. 

இந்த திருமணத்தில் பிரீத்தி ஜிந்தாவின் நெருங்கிய நண்பர்களான சூசன் கான், சுரில்லி கோயெல் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர். திருமணத்தை எளிமையாக முடித்துக் கொண்ட பிரீத்தி ஜிந்தா,

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி முடிந்தபிறகு ஏப்ரலில் திருமண வரவேற்பை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
இயக்குனரை கொல்ல முயற்சி! நடிகைக்கு மூன்றாண்டு சிறை
பிரதியுஷா தற்கொலை வழக்கில் காதலன் ராகுல் சிங்குக்கு முன்ஜாமீன்: ஐகோர்ட்டு உத்தரவு
விஷாலுடன் நடிப்பதை உறுதிப்படுத்திய ராகுல் ப்ரீத் சிங்!
பிரதியுஷாவின் காதலன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
விஷால் ஜோடியாகும் ராகுல் ப்ரீத் சிங்!
செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தா விடுதலை
அமெரிக்க நண்பரை திருமணம் செய்யவுள்ள ப்ரீத்தி ஜிந்தா!
திருமண தகவலை மறுத்த பிரீத்தி ஜிந்தா!
அமெரிக்க காதலரை கல்யாணம் செய்யும் பிரீத்தி ஜிந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions