செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தா விடுதலை

Bookmark and Share

செக் மோசடி வழக்கில் பிரீத்தி ஜிந்தா விடுதலை

நடிகை பிரீத்திஜிந்தா தான் நடிக்கும் இந்திப்படம் ஒன்றுக்கு கதாசிரியராக அப்பாஸ் டைரேவாலா என்பவரை கடந்த 2012–ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார்.

இதற்காக அவருக்கு பிரீத்தி ஜிந்தா ரூ.21 லட்சத்துக்கான காசோலை (செக்) வழங்கினார். அந்த காசோலையை அவர் வங்கியில் போட்டார். ஆனால் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்து விட்டது.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த காசோலைக்கு பணம் அனுமதிக்க வேண்டாம் என்று பிரீத்தி ஜிந்தா தரப்பில் இருந்து வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் காசோலை திரும்ப வந்து விட்டது.

இதனால் பிரீத்தி ஜிந்தாவுக்கு கதாசிரியர் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. பிரீத்தி ஜிந்தா சார்பில் வக்கீல் ஆஜராகி கதாசிரியர் சொன்னபடி பணியை முடித்து தரவில்லை என்று வாதிட்டார்.

4 ஆண்டுகளாக இந்த வழக்கு மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் இருந்து நடிகை பிரீத்தி ஜிந்தாவை விடுதலை செய்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் பிரீத்தி ஜிந்தா கோர்ட்டில் வருகிற ஏப்ரல் 4–ந் தேதி ஆஜராகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்றும் மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


Post your comment





Related News
41 வயதில் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா
அமெரிக்க நண்பரை திருமணம் செய்யவுள்ள ப்ரீத்தி ஜிந்தா!
திருமண தகவலை மறுத்த பிரீத்தி ஜிந்தா!
அமெரிக்க காதலரை கல்யாணம் செய்யும் பிரீத்தி ஜிந்தா
ஆரம்பத்தில் சல்மானை கண்டு பயந்த பிரீத்தி ஜிந்தா
நூடுல்ஸ் பிரச்னை : அமிதாப், மாதுரி, ப்ரீத்திக்கு நோட்டீஸ்!
நான் குத்துப்பாட்டு நடிகை இல்லை : ப்ரீத்தி ஜிந்தா
தியேட்டரில் தேசிய கீதத்திற்கு மதிப்பு கொடுக்காத வாலிபரை விரட்டிய ப்ரீத்தி ஜிந்தா
2 மணிநேரம் வாக்குமூலம் அளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா: அப்படி என்ன கூறினார்?
நெஸ் வாடியா பாலியல் தொந்தரவு: பிரீத்தி ஜிந்தா புகார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions