விவாகரத்து கேட்டு நடிகை பிரேமா கோர்ட்டில் வழக்கு!

Bookmark and Share

 விவாகரத்து கேட்டு நடிகை பிரேமா கோர்ட்டில் வழக்கு!

தமிழில் வெளியான ‘அழகேசன்’ படத்தில் சத்யராஜ் ஜோடியாக நடித்தவர் பிரேமா. ‘தாயே புவனேஸ்வரி’ என்ற பக்தி படத்திலும் நடித்துள்ளார்.

1980-களில் கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இதுவரை 75 படங்களுக்கும் மேல் நடித்து இருக்கிறார்.

கன்னடத்தில் வந்த ‘ஓம்’ என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கர்நாடகா அரசின் விருதையும் பெற்றார். மோகன்லால், சாய்குமார், கிருஷ்ணா, மோகன்பாபு, ஜெகபதிபாபு, உபேந்திரா, விஷ்ணுவர்தன் உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து இருக்கிறார்.

பிரேமாவின் சொந்த ஊர் பெங்களூரு. அங்கு தொழில் அதிபராக இருக்கும் ஜீவன் அப்பச்சு என்பவரை 2006-ல் திருமணம் செய்து கொண்டார்.

சந்தோஷமாக சென்ற இவர்கள் குடும்ப வாழ்க்கையில் திடீர் புயல் வீசியது. இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் பிரேமா விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார்.

கணவருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். இது, கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரேமாவின் விவாகரத்து மனுவை கோர்ட்டு, கவுன்சிலிங் பிரிவுக்கு அனுப்பியுள்ளது. இருவரையும் நேரில் அழைத்து விசாரித்த பிறகு கோர்ட்டு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions