ஆன்லைனில் படத்தை லீக் செய்தவரை கண்டுபிடித்த பிரேமம் டீம்!

Bookmark and Share

ஆன்லைனில் படத்தை லீக் செய்தவரை கண்டுபிடித்த பிரேமம் டீம்!

பிரேமம் படம் ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியானது குறித்து நடவடிக்கை எடுக்க, ஆன்டி பைரஸி செல்லிடம் புகார் கொடுத்தும், தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால், தாங்களே களத்தில் நேரடியாக களம் இறங்கியது பிரேமம் டீம்.

தற்போது படத்தை ஆன்லைனில் திருட்டுத்தனமாக பதிவேற்றியவர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாக படத்தின் தயாரிப்பாளர் அன்வர் ரஷீத் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் யார் என்பது குறித்து வெளிப்படையாக கூற மறுத்துவிட்டார்.

“சர்ச்சைகளை உருவாக்க வேண்டும் என்பதல்ல எங்கள் எண்ணம்.. இதன் பின்னணியில் உள்ளவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். எங்களின் பொறியில் சிக்கிய நபர் இந்தப்படத்தின் திருட்டு காப்பியை நான்கு பேரிடம் கொடுத்துள்ளார்.. அந்த நபர் யாரென்று சொல்ல விரும்பவில்லை. அதுகுறித்த தகவல்களை ஆன்டி பைரஸி செல்லிடம் தடயங்களுடன் ஒப்படைக்க இருக்கிறோம்..

ஆனால் அந்த நால்வரில் ஆன்லைனில் இதை பதிவேற்றிய நபரை மட்டுமே இனி அடையாளம் காணவேண்டும்.” என கூறியுள்ள அன்வர் ரஷீத், மற்றவர்கள் நினைப்பது போல இதன் பின்னணியில் மலையாள பிரபலங்கள் யாரும் இருப்பதாக  நம்பவில்லை எனவும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்! எதிர்பாராத நிகழ்வு
என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.!
ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்!
பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு
சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions